5 வருடங்கள் முன்புதான் பாஜகவில் 'இணைந்த' எடியூரப்பா இப்போது முதல்வர்!
Recommended Video

பெங்களூர்: கடந்த தேர்தலை தனிக்கட்சி ஆரம்பித்து சந்தித்த பி.எஸ்.எடியூரப்பா இம்முறை பாஜக சார்பில் மீண்டும் முதல்வராக உள்ளார்.
2008ல் கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தது. முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். ஆனால், ரெட்டி சகோதரர்களுடன் ஏற்பட்ட மோதலால், 5 ஆண்டு காலத்தில், 3 முதல்வர்களை அரியணையில் அமர்த்தி அழகு பார்த்தது பாஜக தலைமை.
கர்நாடகாவில், எப்போதும் அரசியல் குழப்பமாகவே காணப்பட்டது. பாஜக தலைமை தனக்கு மீண்டும் முதல்வர் பதவி தரவில்லை என்ற கோபத்தில், கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை துவக்கினார் எடியூரப்பா.

கர்நாடக ஜனதா கட்சி
பாஜகவில் இருந்த தனது ஆதரவாளர்கள் சிலரை அவரால் ஈர்க்க முடிந்தது. 2013 சட்டசபை தேர்தலில் கர்நாடக ஜனதா கட்சியும் களம் கண்டது. முதல் தேர்தலிலேயே 10 சதவீத வாக்கு வங்கியை பெற்றது. 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

பாஜக பெரும் தோல்வி
ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை, எடியூரப்பா கட்சி போன்ற காரணங்களால் பாஜக அத்தேர்தலில் வெறும், 40 தொகுதிகளில்தான் வெல்ல முடிந்தது. காங்கிரஸ் அறுதி பெரும்பான்மையோடு வெற்றி பெற்றது. இப்படி பாஜக தோல்விக்கு முக்கியமான ஒரு காரணமாக விளங்கிய எடியூரப்பா பிறகு மீண்டும் பாஜகவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

எடியூரப்பாவே முதல்வர்
கர்நாடகாவில் பாஜகவை உருவாக்கி வளர்த்ததில் பெரும் பங்கு எடியூரப்பாவுக்குதான் உண்டு. விவசாயிகள் போராட்டத்தில் முன்னின்றுதான் அவர் மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர். இதனால் அவரை தவிர்த்துவிட்டு மற்றொருவரை பாஜக முதல்வர் வேட்பாளராக நிறுத்த யோசிக்க முடியாது. எனவே இம்முறை எடியூரப்பாவே முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். தேர்தல் டிரெண்ட் அடிப்படையில் பார்த்தால், எடியூரப்பா முதல்வராகப்போவது உறுதி.

5 வருடங்களில் அபாரம்
கடந்த தேர்தலில் தனிக்கட்சியில் போட்டியிட்ட எடியூரப்பா இம்முறை பாஜக முதல்வர் வேட்பாளர். மாநில பாஜக தலைவரும் இவர்தான். வெறும் 5 ஆண்டுகளில் இந்த மாற்றம் சாத்தியப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications