நிதிஷ்குமாரின் ' அரசியல் டி.என்.ஏ.வில் கோளாறு'.. பிரதமர் மோடியின் பேச்சால் கொந்தளிக்கும் பீகார்!!
பாட்னா: கூட்டணிகளை மாற்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் அரசியல் மரபணுவில்தான் (டி.என்.ஏ) கோளாறு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது பீகாரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 50 லட்சம் பேரின் மரபணுக்களை பிரதமர் மோடிக்கு அனுப்புவோம் என்று நிதிஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் கடந்த மாதம் 25-ந்தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தனது தனிப்பட்ட நலனுக்காக பா.ஜ.கவுடனான கூட்டணியை நிதிஷ்குமார் முறித்தார். தம்முடைய சகாக்கள் மற்றும் கூட்டணியை அவர் கழற்றி விடுவதை பார்க்கும் போது அவருடைய அரசியல் ரத்தத்தில் டி.என்.ஏ.வில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் என தோன்றுகிறது என்று கூறியிருந்தார்.

பிரதமரின் பேச்சு பீகார் அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த பீகார் மக்களையே பிரதமர் மோடி இழிவுபடுத்தியிருப்பதாக முதல்வர் நிதிஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து மோடிக்கு எதிராக சபாப் வாப்சி அல்லது உங்கள் கருத்தை திரும்ப பெறுங்கள் என்ற பிரசாரத்தை நிதிஷ்குமார் தொடங்கி உள்ளார்.
Inspite of our repeated pleas Modiji hasn't retracted his derogatory remarks on our DNA, we're going to launch शब्दवापसी /TakeBackYourWords
— Nitish Kumar (@NitishKumar) August 10, 2015 இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி, பீகார் மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்து உள்ளார். இந்த தரக்குறைவான கருத்துகளை திரும்ப பெற வலியுறுத்தி பலமுறை கேட்டுக்கொண்ட போதும் அவர் செவிசாய்க்கவில்லை. இதனால் பீகாரை சேர்ந்த 50 லட்சம் பேரின் டி.என்.ஏ. மாதிரிகளை அவர்களின் கையெழுத்துடன் பிரதமருக்கு அனுப்பி வைப்போம் என்று எச்சரித்துள்ளார் நிதிஷ்குமார்.
இதனிடையே அரசியல் டி.என்.ஏ. குறித்து பேசிய பிரதமர் மோடி வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தி ஐக்கிய ஜனதாதளம் மற்றும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம் இணைந்து பாட்னாவில் இன்று தர்ணா போராட்டம் நடத்த உள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications