காவிரியில் நீர் திறப்பு: கர்நாடக விவசாயிகள் தீ பந்தங்களுடன் நள்ளிரவில் போராட்டம்.. தற்கொலை முயற்சி!
மாண்டியா: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்மாநில விவசாயிகள் தீ பந்தங்களுடன் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கர்நாடக விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று வலியுறுத்தி மாண்டியாவில் நேற்று கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் காரணமாக ராம்நகர், மாண்டியா, மைசூர், ஸ்ரீரங்கப்பட்டினா பகுதிகள் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. மாண்டியாவில் மட்டும் சுமார் 2,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்படி கிருஷ்ணசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நள்ளிரவிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
நீர் திறப்பையடுத்து கர்நாடகா விவசாயிகள் தீப்பந்தங்களுடன் போராட்டம் நடத்தி வருவதால் இரு அணைகளிலும் துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரு அணைப்பகுதிகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனிடையே காவிரி ஆற்றில் குதித்து சூரி என்ற விவசாயி தற்கொலை முயற்சி செய்துள்ளதாக சதிஷ் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு முதல்வர் சித்தராமையாவும் டுவிட்டர் மூலம் பதிலளித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications