48 எம்.எல்.ஏ.க்கள், 3 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்கு: 4 எம்.எல்.ஏ.க்கள் மீது பலாத்கார வழக்கு
டெல்லி: 3 எம்.பி.க்கள் மற்றும் 48 எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு உள்ளது தெரிய வந்துள்ளது.
ஜனநாயக சீர்திருத்த சங்கம் இந்தியா முழுவதும் உள்ள 776 எம்.பி.க்களில் 774 பேர் மற்றும் 4,120 எம்.எல்.ஏ.க்களில் 4,078 பேரின் தேர்தல் வேட்புமனுக்களை ஆய்வு செய்துள்ளது.
அதில் 1, 581 பேர் தங்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் உள்ளதை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளனர். அதில் 51 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளது. 4 எம்.எல்.ஏ.க்கள் மீது பாலியல் பலாத்கார வழக்குகள் உள்ளது.

தேர்தல்
பெண்களுக்கு எதிரான குற்றம் பிரச்சனையில் சிக்கிய 334 வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி அளித்துள்ளன அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள். அதில் 294 பேருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.

எம்.பி.க்கள்
பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் எம்.பி.க்கள் ராஜ்குமார் தூத்(ராஜ்ய சபா, சிவ சேனா), பார்தா பிரதீம் ரே(லோக் சபா, திரிணாமூல் காங்கிரஸ்), ஜாய்ஸ் ஜார்ஜ்(லோக் சபா, சுயேட்சை) ஆவர்.

பாஜக
இருப்பதிலேயே பாஜகவில் தான் பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டு உள்ள எம்.எல்.ஏ.க்கள்(14 பேர்) அதிகம் உள்ளனர். பாஜகவை தொடர்ந்து சிவ சேனாவில் 7 பேரும், திரிணாமூல் காங்கிரஸில் 6 பேரும் உள்ளனர்.

டிக்கெட்
பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுத்திலும் பாஜக முதலிடத்தில் உள்ளது. பாஜக பெண்களுக்கு எதிரான குற்றத்தில் 48 பேருக்கு டிக்கெட் கொடுத்துள்ளது.

பலாத்காரம்
எம்.எல்.ஏ.க்கள் கொனுகுண்ட்லா சூர்யநாராயணா(தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திரா), சுபல் சாஹு(காங்கிரஸ், ஒடிஷா), ஜீத்தாபாய் ஜி. அஹிர்(பாஜக, குஜராத்), குலாப் யாதவ்(ராஷ்ட்ரிய ஜனதாதளம், பீகார்) ஆகியோர் மீது பாலியல் பலாத்கார வழக்கு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பாலியல் பலாத்கார வழக்கு உள்ள 29 வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications