Andaman Earthquake: நள்ளிரவில் குலுங்கிய கட்டிடங்கள்.. அந்தமானில் 6.2 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! மக்கள் பீதி
அந்தமான்: அந்தமான் பகுதியில் நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் (Andaman earthquake) ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் அங்குக் கட்டிடங்கள் குலுங்கின. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்கு மக்கள் பீதியில் உள்ளனர். அதேநேரம் இதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து இப்போது வரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
உலகில் எப்போது எங்கு நிலநடுக்கம் ஏற்படும் என்பதே தெரியாது. திடீரென ஏற்படும் நிலநடுக்கம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் பொருளாதார இழப்புகளும் பல நேரங்களில் நாம் கற்பனை கூடச் செய்ய முடியாத அளவுக்கு மோசமாக இருக்கிறது.

இதற்கிடையே அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெர்மன் ஆராய்ச்சி மையமான GFZ என்ற அமைப்பும் அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக GFZ தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தீவுகள் அதிர்ந்துள்ளன. நள்ளிரவில் அந்தமானில் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அஞ்சிய மக்கள் வீதிக்கு ஓடி வந்தனர்.
இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது சேதம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. டெல்லி-என்சிஆர் பகுதியில் சமீபத்தில் தான் இரண்டு நாட்களுக்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே டெக்டோனிக் தட்டுகளின் (tectonic plates) இயக்கமாகும். நமது பூமி மிகப் பெரிய டெக்டோனிக் தட்டுகளால் ஆனது. இவை மெதுவாக நகர்ந்து கொண்டே இருக்கும். இந்தத் தட்டுகள் ஒன்றோடு ஒன்று உரசும்போது, மோதும்போது ஏற்படும் அழுத்தம் மற்றும் ஆற்றல் வெளிப்படுவதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications