ஜம்முவில் பாகிஸ்தான் ராணுவம் விடிய விடிய அடாவடித் தாக்குதல்: சிறுவன், பெண் உள்பட 6 பேர் பலி
காஷ்மீர்: காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்தியர ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 9 வயது சிறுவன், ஒரு பெண் உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய ராணுவ நிலைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் பிரதமர் மோடிக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான உறவு ஏற்பட விரும்புவதாக அவர் தனது வாழ்த்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் வாழ்த்திய நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள நான்கு செக்டர்களில் இருக்கும் ராணுவ நிலைகள் மீது அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

பதிலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறார்கள். விடிய விடிய தொடர்ந்த இந்த தாக்குதல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் 9 வயது சிறுவன், கிராம பஞ்சாயத்து தலைவர் உள்பட 5 பொதுமக்கள் நேற்று பலியாகினர். இந்நிலையில் பாலகோட் செக்டரில் 40 வயது பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 9 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்த அனைவரும் ஜம்முவுக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் அத்துமீறி 32 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பூஞ்ச் பகுதியில் நேற்றுடன் தொடர்ந்து 8வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலகோட் கிராமத்தில் 7 பேர் சென்ற வாகனத்தை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அந்த வாகனத்தில் இருந்த கிராம பஞ்சாயத்து தலைவர் பலியானார்.
ஜூலை மாதம் 26ம் தேதியில் இருந்து இதுவரை பாகிஸ்தான் 192 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது என்று அரசு கடந்த வாரம் லோக்சபாவில் தெரிவித்தது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications