புராரியை போல் ஜார்க்கண்டிலும் மாஸ் சூசைடு... அதே ஞாயிற்றுக்கிழமை... 6 பேர் பலியானதன் பின்னணி என்ன?
ராஞ்சி: புராரி தற்கொலை சம்பவத்தை போல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹசாரிபார் நகரில் ஒரு குடியிருப்பு பகுதியில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்று பார்த்த போது மகாவீர் மகேஸ்வரி (70), கிரண் மகேஸ்வரி (65), நரேஷ் அகர்வால் (40), அவரது மனைவி பிரீத்தி அகர்வால், இவர்களது குழந்தைகள் அமான் (8) மற்றும் அஞ்சலி (6) ஆகியோர் என்று தெரியவந்தது.

மேலும் வீட்டை சோதனையிட்ட போலீஸார் அங்கிருந்த தற்கொலைக்கான கடிதத்தை கைப்பற்றினர். அதில் இந்த குடும்பத்தினர் உலர்ந்த பழங்கள் கடை நடத்தி வந்ததாகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடையை மூடிவிட்டதாகவும் கூறியிருந்தனர். மேலும் பணத்தட்டுப்பாட்டால் ஏகப்பட்ட கடன் வாங்கி திருப்பி செலுத்த இயலாததால் இந்த விபரீத முடிவை தாங்கள் எடுப்பதாகவும் கூறியிருந்தனர்.
இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி புராரி பகுதியில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications