Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

41 உயிர்களை காப்பாற்றிய 6 இன்ச் பைப்.. 17 நாட்கள் கடந்தும் உயிரோடு மீட்கப்பட காரணமே அதுதான்!

Subscribe to Oneindia Tamil

உத்தர்காசி: 17 நாட்களைக் கடந்தும், சுரங்கத்திற்கு சிக்கிய 41 பேரும் உயிருடன் இருப்பதற்குக் காரணமே, அந்த 6 இன்ச் குழாய் தான் என்ற தகவலைக் கூறியுள்ளார் பேரிடர் மேலாண்மை வல்லுநர்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி அருகே சில்க்யாரா பகுதியில் 4.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி அன்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென சுரங்கம் இடிந்து விழுந்தது. உள்ளே தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த இடத்தில் பாதிப்பு ஏற்படாத போதும், நுழைவு வாயிலில் பாறைகள் சரிந்து மூடியதால் 41 தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

6 inch pipe is the reason for 41 workers still alive after 17 days

இந்த சுரங்கத்தில் ஏற்கனவே இருந்த பைப் சேதமடையாமல் இருந்ததால், அதன் வழியாக வாக்கி டாக்கியை அனுப்பி அவர்களுடன் பேசி, அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பதை மீட்புக் குழுவினர் உறுதி செய்தனர். தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக, உடனடியாக, குழாய் வழியாக ஆக்சிஜன், உணவு, மாத்திரைகள் ஆகியவை வழங்கப்பட்டன. சாதாரண உணவுகளை சாப்பிட்டால், இயற்கை உபாதைகளை கழிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், விண்வெளி வீரர்களுக்கான உணவு முறைகளே பின்பற்றப்பட்டு வருகின்றன.

சுரங்கத்திற்குள் சிக்கியவர்கள் முதல் ஒரு வாரத்திற்கு பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். ஏனெனில் சிறிய குழாயில் உயிர் வாழ தேவையான எளிய வகை உணவுகள் அனுப்பப்பட்டு வந்தன. அதன்பிறகு 6 இஞ்ச் பைப்பை வெற்றிகரமாக உள்ளே செலுத்தினர். இதையடுத்து எண்டோஸ்கோபி கேமரா மூலம் உள்ளே இருக்கும் தொழிலாளர்களின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மன நல ஆலோசகர்கள் அவ்வப்போது வாக்கி டாக்கி மூலம் பேசி தொழிலாளர்களுக்கு பெரிதும் நம்பிக்கை அளித்து வந்தனர்.

உள்ளே சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 17வது நாளான இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கிடைமட்டமாக சுரங்கம் தோண்டும் பணிகளில் பல்வேறு தடைகளை தாண்டி முன்னேறி சென்றுள்ளனர். மீட்பதற்கான பைப்களை உள்ளே முழுமையாக அனுப்பி விட்டதாக உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை ஒவ்வொருவராக வெளியே கொண்டுவர வேண்டியது தான் பாக்கி. வெளியே வரும் தொழிலாளர்கள் ஒவ்வொருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கின்றன. நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள், சிகிச்சை அளிக்க தயார் நிலையில் அங்கே உள்ளனர்.

17 நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் சுரங்கத்திற்குள் சிக்கி இருந்தாலும், கடந்த 17 நாட்களும் தொழிலாளர்களை மன தைரியத்துடன் இருப்பது பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. 41 தொழிலாளர்களும் ஏற்கனவே பல ஆண்டுகளாக சுரங்க வேலைகளில் அனுபவம் கொண்டவர்கள் என்பதால் தான், உள்ளே சிக்கி இருக்கும்போதும், இந்தச் சூழ்நிலையைச் சமாளித்து வெற்றி கண்டுள்ளனர்.

மேலும், சுரங்கத்திற்குள் சிக்கியவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கவும், உணவுப் பொருட்கள் வழங்கவும், மீட்புக் குழுவினர் உள்ளே செலுத்திய குழாய் வெற்றிகரமாகச் சென்றடைந்தது. அது மட்டும் தோல்வி அடைந்திருந்தால் இந்த விபத்து மிக மோசமான விளைவை ஏற்படுத்திருக்கும், அந்த பைப் செலுத்தப்பட்டது தான் மிகப்பெரிய சாதனை. இன்று 41 பேரும் உயிருடன் இருப்பதற்கு காரணமே அந்த 6 இன்ச் பைப் தான் என பேரிடர் மேலாண்மை வல்லுநர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+