சித்தூரில் நடந்த சாலை விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூரில் நடந்த சாலை விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த 6 பேர் பலியானார்கள். இவர்கள் திருப்பதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது லாரி மோதி விபத்தில் சிக்கினர்.

சந்திரகிரி ஹைராலா என்ற இடத்தில் இன்று காலை இந்த விபத்து நடந்தது. விபத்தில் சிக்கிய வேன் திருப்பதியிலிருந்து பெங்களூர் திரும்பிக் கொண்டிருந்தது. மறு மார்க்கத்தில் பெங்களூரிலிருந்து ஒரு லாரி திருப்பதி நோக்கி வந்து கொண்டிருந்தது.
ஹைராலா பகுதியில் வந்தபோது வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 7 பேர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications