பூட்டிய வீடு.. வெடித்துச் சிதறிய ஃபிரிட்ஜ்.. 5 குழந்தைகள் உள்பட 6 பேர் கருகி பலி!
காசியாபாத்: எல்லாமே 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள். உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் பூட்டிய வீட்டுக்குள் குளிர்சாதன பெட்டியில் மின்கசிவால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் இறந்த 5 குழந்தைகளும் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுதான் வேதனையாக உள்ளது. காஸியாபாத்தின் லோனி பகுதியில்தான் இந்த விபத்து நடந்தது.

அந்தப் பகுதியில் உள்ள மெளலானா ஆசாத் காலனிப் பகுதியில் வசித்து வந்தவர் பர்வீன். 40 வயதாகிறது. இவர் தனது வீட்டில் பிள்ளைகள் பாத்திமா (12), சாஹிமா (10), ரதியா (8), அப்துல் அஜீம் (8), அப்துல் அஹாத் (5) ஆகியோருடன் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டில் இருந்த ஃபிரிட்ஜில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்துக் கொண்டு வெடித்துச் சிதறியது. இதில் பர்வீன் உள்பட 6 பேருமே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீப்பிடித்துக் கொண்டபோது அவர்கள் படுத்திருந்த அறை முழுவதும் தீ பரவி விட்டதால் யாரும் தப்ப முடியாமல் போனது.
இந்த சம்பவம் காஸியாபாத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications