அங்கிள்.. எப்படியாச்சும் கோழிக்குஞ்சை காப்பாத்துங்க.. 10 ரூபாயுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த குட்டி பையன்
Recommended Video

அய்சால்: "என் பையன் இப்படி செய்வான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை.. மனசு நிறைய ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்கிறார் ஒரு தந்தை!
மிசோரம் சாய்ரங் பகுதியில் 6 வயது சிறுவன் ஒருவன் சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பக்கத்து வீட்டு கோழிக்குஞ்சு அங்கு திரிந்து கொண்டிருந்தது.
சிறுவனோ தெரியாமல் அந்த கோழிக்குஞ்சு மீது சைக்கிளை ஏற்றிவிட்டான். உடனே முகமெல்லாம் வியர்த்து போன சிறுவன், அடிபட்ட கோழிக்குஞ்சினை எடுத்து கொண்டு அப்பாவிடம் ஓடினான்.

கண்டிப்பு
"தெரியாமல் சைக்கிள் விட்டு ஏத்திட்டேன்.. எப்படியாவது இந்த கோழிக்குஞ்சை காப்பாத்தணும்.. வாங்க ஆஸ்பத்திரிக்கு போலாம்" என்று கெஞ்சி கூப்பிட்டுள்ளான். அதற்கு சிறுவனின் அப்பாவோ, "அதெல்லாம் தெரியாது... நீதானே சைக்கிள் விட்டு ஏத்தினே? நீயே இதை தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போ.. நானெல்லாம் கூட வரமாட்டேன்.. ஆஸ்பத்திரிக்கு பணமும் தரமாட்டேன்" என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.

சேமிப்பு பணம்
அடிபட்ட கோழிக்குஞ்சை காப்பாற்ற அப்பா வரமாட்டேங்குறாரே என்று கண்கலங்கி போன சிறுவன், கொஞ்சம் கூட தாமதிக்காமல் வீட்டில் உண்டியலில் சேர்த்து வைத்திருக்கும் பணம் எவ்வளவு என்று பார்த்தான். 10 ரூபாய் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு, அடிபட்ட கோழிக்குஞ்சையும் எடுத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான்.

சைக்கிள்
கையில் கோழிக்குஞ்சுடன் பதட்டத்தில் வந்து நிற்கும் சிறுவனை அங்கிருந்த நர்ஸ்கள் என்னவென்று விசாரித்தனர். அப்போது விவரத்தை சொல்லவும், ஆஸ்பத்திரியில் இருந்தவர்களுக்கெல்லாம் என்னவோ போல் ஆகிவிட்டது. ஏனென்றால் சிறுவன் சைக்கிளை விட்டு ஏத்தும்போதே அந்த கோழிக்குஞ்சு இறந்துவிட்டது.

சிறுவன்
அது தெரியாமல் அடிபட்டதாக நினைத்து கொண்டு ஆஸ்பத்திரி வரை வந்ததை நினைத்து நெகிழ்ந்து போய்விட்டார்கள். உடனே அங்கிருந்தவர்கள் சிறுவனை ஒரு கையில் கோழிக்குஞ்சு, ஒரு கையில் பத்து ரூபாய் நோட்டுடன் போட்டோ எடுத்து இணையத்தில் போட்டுவிட.. சிறுவனுடன் கோழிக்குஞ்சு போட்டோ றெக்கை கட்டி பறந்து வருகின்றன.
சிறுவனின் இரக்கத்துக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. மரித்தது கோழிக்குஞ்சுதான்.. ஆனால் மனிதநேயம் உயிர்ப்புடன் கம்பீரமாக காட்சி தருகிறது இந்த குட்டிப் பையன் ரூபத்தில்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications