6 வயது மகளின் 2 கிட்னியையும் காணோம்... எய்ம்ஸ் டாக்டர் மீது தந்தை பரபரப்புப் புகார்
டெல்லி: அறுவைச் சிகிச்சை மூலம் தனது 6 வயது மகளின் இரண்டு சிறுநீரகங்களையும் அகற்றி விட்டதாக எய்ம்ஸ் டாக்டர் மீது தந்தை ஒருவர் போலீசில் பரபரப்புப் புகார் அளித்துள்ளார்.
உத்திரப்பிரதேசம் பரேலி பகுதியைச் சேர்ந்தவர் பவன்குமார். இவரது 6 வயது மகள் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறால் அவதிப் பட்டு வந்துள்ளார். எனவே, கடந்தாண்டு சிகிச்சைக்காக மகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் பவன்குமார்.
அங்கு அச்சிறுமியைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவரது இடது பக்க சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகவும், வலது பக்க சிறுநீரகம் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதிப்படைந்துள்ள சிறுநீரகத்தை நீக்கி விடுவது நல்லது என குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்படி, அச்சிறுமியின் சிறுநீரகம் அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கப் பட்டது.
அறுவைச் சிகிச்சை முடிந்த சில தினங்களிலேயே சிறுமி கடுமையான வலியால் அவதிப்பட்டுள்ளார். அப்போது எடுக்கப் பட்ட ஸ்கேன் ரிப்போர்ட்டில் சிறுமியின் வயிற்றுப் பகுதியில் சிறுநீரகங்களே இல்லை எனக் கூறப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பவன்குமார், இது தொடர்பாக மருத்துவர்களிடம் விசாரித்துள்ளார்.
ஆனால், பவன்குமாரின் கேள்விகளுக்கு மருத்துவர்கள் சரிவர பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக ஹவுஸ் காஸ் போலீசில் புகார் அளித்துள்ளார் பவன்குமார்.
இந்த புகாரின் பேரில் மூத்த மருத்துவ பேராசிரியர் தலைமையில் விசாரணை நடத்த கமிட்டி ஒன்றை எய்ம்ஸ் நிர்வாகம் அமைத்துள்ளது. இந்த கமிட்டி நடத்திய விசாரணைக்கு பின் ஏற்கனவே கடந்த 20ம் தேதி கூட்டம் ஒன்றை கூட்டியது. பின்னர் மீண்டும் இந்த வாரத்தில் விசாரணையை இறுதி செய்து அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
இந்தியாவின் தரம் உயர்ந்த அரசு மருத்துவமனைகளில் முதன்மையானதாகக் கருதப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்துள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இரண்டு சிறுநீரகங்களும் திருடப் பட்டுள்ளதாக போலீசில் அளிக்கப் பட்டுள்ள புகாரால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications