டெல்லியில் 60 வயது தாத்தா கூட இவ்வளவு மோசமா?... 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் 60 வயது முதியவர் ஒருவர் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு உண்மையை சொல்லாமல் இருக்க அந்த சிறுமிகளுக்கு ரூ. 5 கொடுத்து சரிகட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது.

டெல்லியில் தேன்மேற்கு பகுதியில் தான் இந்த படுபாதக செயல் அரங்கேறியுள்ளது. ஒரு வீட்டின் வாசலில் 5 வயது மற்றும் 9 வயது சிறுமிகள் இரண்டு பேர் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 60 வயது முதியவர் முகமது ஜெயினுள் இரண்டு சிறுமிகளிடமும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து சிறுமிகளின் பெற்றோர் அவசர போலீஸ் 100க்கு தொலைபேசியில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த போலீஸ் முதியவரை கைது செய்துள்ளனர்.

சிறுமிகளுக்கு காசு கொடுத்து ஏமாற்றல்

சிறுமிகளுக்கு காசு கொடுத்து ஏமாற்றல்

போலீசாரிடம் முதியவர் அளித்த வாக்குமூலத்தில் இரண்டு சிறுமிகளையும் சாக்லேட் மற்றும் தின்பண்டம் வாங்கித்தருவதாக தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று ஒரு சிறுமி கண் முன்னே மற்றொரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் இது குறித்து யாரிடமும் கூறாமல் இருக்க ரூ. 5 காசு கொடுத்து, இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார்.

கதறிய சிறுமி

கதறிய சிறுமி

முதியவருக்கு பயந்து அந்த சிறுமிகளும் இது குறித்து யாரிடமும் எதுவும் கூறவில்லை. 5 வயது சிறுமி வலி தாங்க முடியாமல் அழுததையடுத்து அவளின் தாய் சிறுமியின் உடல் பாகங்களை பார்த்த போது அவள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுமியிடம் இது குறித்து கேட்ட போது நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்ட முதியவர்

சிறையில் அடைக்கப்பட்ட முதியவர்

சிறுமியின் தாய் அளித்த புகாரையடுத்து ஜெயினுள் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி இவ்வளவு மோசமா?

டெல்லி இவ்வளவு மோசமா?

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரங்கள் பட்டியலில் டெல்லி முதல் இடத்தில் இருப்பதாக மத்திய குற்ற ஆவண காப்பகம் நேற்று தான் புள்ளி விவரங்களை வெளியிட்டது. பெண்களுக்கு மட்டுமல்ல சிறுமிகளுக்கும் டெல்லி பாதுகாப்பில்லாத நகரம் தான் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Police have arrested a 60-year-old man at Delhi who sexually assaulted two minor girls and then gave them Rs 5 each not to tell anyone about the incident

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற