அமிர்தானந்தமயி 60வது பிறந்தநாள்: உற்சாக கொண்டாட்டம்… நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை

ஏழைகளுக்கு கல்வி உதவித்தொகை, புற்று நோயாளிகள், இருதய நோயாளிகளுக்கு மாதா அமிர்தானந்தமயி மருத்துவக் கல்லூரியில் இலவச சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் பெண் துறவு மாதா அமிர்தானந்தமயி. இவருக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். அமிர்தானந்தமயி ஆசிரமம் கொல்லத்தில் உள்ள அமிர்தபுரியில் உள்ளது.
இவரது 60-வது பிறந்தநாள் விழா வருகிற 27-ந்தேதி வருகிறது. இதையொட்டி அமிர்த வருஷம்-60 என்று கொண்டாடப்படுகிறது. நேற்று தொடங்கிய இந்த விழா வருகிற 27-ந்தேதி வரை அமிர்தபுரியில் ஆசிரமத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது.
அமிர்தபுரி ஆசிரமத்தில் நேற்று காலை விசேஷ ஹோம பூஜை நடைபெற்றது. இந்த பூஜையை மாதா அமிர்தானந்தமயி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த ஹோமத்திற்கு 72 சதுர அடியில் பெரிய ஓம குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. 72 பூசாரிகள் ராகவேந்திர பட்டர் தலைமையில் இந்த ஹோமத்தை நடத்தினர்.
மாதா அமிர்தானந்தமயி பிறந்தநாளையொட்டி ஆசிர மத்திற்கு வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.மேலும் ஏழைகளுக்கு கல்வி உதவித்தொகை, புற்று நோயாளிகள், இருதய நோயாளிகளுக்கு மாதா அமிர்தானந்தமயி மருத்துவக் கல்லூரியில் இலவச சிகிச்சை பிரபல மருத்துவர்கள் மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கியும் அமிர்தானந்தமயின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications