Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்ப சுற்றுலா போன 62 வயது நபர்.. ‛டிராபிக்’கால் பறிப்போன உயிர்.. முசோரியில் பெரும் சோகம்

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகாண்ட்டுக்கு குடும்பத்துடன் இன்ப சுற்றுலா சென்ற 62 வயது முதியவர் திடீர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் சொந்த காரிலேயே குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது கடும் போக்குவரத்து நெரிசலில் வாகனம் சிக்கியது. இதனால் அந்த 62 வயது நபர் பரிதாபமாக இறந்தார்.

டெல்லியை சேர்ந்தவர் கமல் கிஷோர் டாண்டன். இவருக்கு வயது 62. இவர் உத்தரகாண்ட் மாநிலம் முசோரிக்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். கடந்த 5ம் தேதி முசோரி சென்ற கமல் கிஷோர் டாண்டன் மோதிலால் நேரு ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கினார்.

62-year-old-man-dies-before-reaching-hospital-due-to-heavy-traffic-in-mussoorie

தற்போது முசோரியில் மழை பெய்து வருகிறது. காலநிலை அடிக்கடி மாறி வருகிறது. கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த காலநிலை மாற்றத்தால் கமல் கிஷோர் டாண்டன் உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

குடும்பத்தினர் டாக்டரை அழைத்து வந்து கமல் கிஷோர் டாண்டனுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மாறாக அவரது உடல்நலம் மோசமானது. இதையடுத்து குடும்பத்தினர் கமல் கிஷோர் டாண்டனை அருகே உள்ள லாண்டூர் கம்யூனிட்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர்.

இதற்காக 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர். டேராடூனில் இருந்து ஒரு மணிநேரம் பயணித்து தான் ஆம்புலன்ஸ் வர வேண்டி இருந்தது. இதனால் அவர்கள் தங்களின் சொந்த காரில் கமல் கிஷோர் டாண்டனை வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். முசோரியில் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து மருத்துவமனை செல்லும் ரோடு மிகவும் குறுகலாக இருந்தது. அதுமட்டுமின்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. லாரிகள், சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதனால் கமல் கிஷோர் டாண்டனை வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முயற்சி தடைப்பட்டது. இதற்கிடையே காரில் அவரது உடல்நலம் மோசமானது. இதையடுத்து குடும்பத்தினர், போலீசார், அந்த பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து சாலையில் நின்ற வாகன ஓட்டுனர்களிடம் பேசி கமல் கிஷோர் டாண்டனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதற்கு சுமார் 45 நிமிடங்கள் வரை நேரம் எடுத்தது. இப்படியாக போராடி காரில் கமல் கிஷோர் டாண்டனை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனையில் கமல் கிஷோர் டாண்டனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போக்குவரத்து நெரிசலில் வாகனம் சிக்கியதால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. இதனால் அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் கமல் கிஷோர் டாண்டன் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+