For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் 634 சிறைக் கைதிகள் விடுதலை

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 634 சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாக அம்மாநில முதல்வர் மெஹ்பூபா முக்தி அறிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் போராட்டத்தின்போது பாதுகாப்புப்படை வீரர்கள் மீது கற்களை வீசி தாக்குபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பது வழக்கம்.

 634 'stone-pelters' in Kashmir to get amnesty on Eid

இந்நிலையில் 2008-ம் ஆண்டு முதல் 2014 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கல்வீச்சு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விடுவிக்கும் வகையில், அவர்களின் வழக்குகளை மறுஆய்வு செய்யும்படி முதலமைச்சர் மெஹபூபா முப்தி உள்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, உள்துறை அமைச்சகத்தின் மூன்று அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்து மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் கைது செய்யப்பட்ட 634 பேர் மீதான வழக்குகளை திரும்ப பெறுவதற்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரைகள் காவல்துறைக்கு அனுப்பப்பட்டு, உடனடியாக வழக்குகளை வாபஸ் பெறும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 634 பேருக்கும் ரம்ஜானை முன்னிட்டு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. இவர்களை விடுதலை செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்வை மறுசீரமைப்பு செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படும் என்றும் மெஹபூபா முப்தி கூறியுள்ளார்.

English summary
The Jammu and Kashmir government withdrew cases against 634 youth booked for stone-pelting in different police station areas of the Kashmir
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X