Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

27 வயது மாணவியை மணந்த 64 வயது பேராசிரியர்.. திரண்டு வந்து தாக்கிய குடும்பம்.. வீடியோ

பேராசிரியரை மாணவி திருமணம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    27 வயது மாணவியை மணந்த 64 வயது பேராசிரியரை தாக்கிய குடும்பத்தினர்-வீடியோ

    பெங்களூரு: 64 வயது பெரியவரை 27 வயது இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பஞ்சாப்பில் நடந்துள்ளது.

    அந்தக் காலத்தில் நம் பெரியோர்களில் முக்கால்வாசி பேர் மிகசிறிய வயது பெண்ணை திருமணம் செய்திருப்பார்கள். இதற்கு காரணம், சமுதாய சூழலும், குடும்ப சூழலும்தான்.

    பொதுவாகவே வயது குறைந்தவர்களை வயது அதிகமானவர்கள் திருமணம் செய்வது வழக்கம்தான். ஆனால் வழக்கம் எப்போது அதிர்ச்சியாகவும், பரபரப்பாகவும் ஆகிறது என்றால் இந்த வயதின் வித்தியாசம் அதிகரிக்கும்போதுதான்.

    சரியான புரிதல்

    சரியான புரிதல்

    இதற்கு எத்தனையோ உதாரணங்கள் தமிழ்நாட்டிலேயே உள்ளது. சமீபத்தில் திரைப்பட இயக்குனர் 60 வயதான வேலுபிரபாகரன் கூட தன் வயதில் பாதியான 35 வயதான நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டார். வயது ஒரு தடையில்லை, சரியான புரிதல் இருவருக்குள் இருந்தால் போதும் என்ற மனப்பான்மை தற்போது அதிகரித்துள்ளது. இப்போது பஞ்சாப்பிலும் இப்போது இதுபோன்ற ஒரு திருமணம் நடந்துள்ளது.

    மகத் என்ற மாணவி

    மகத் என்ற மாணவி

    பெங்களூரை சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்குத்தான் வயது 64. ஆனால் மனைவியை இழந்தவர். இதனால் வீட்டில் தனியாகவே வாழ்ந்து வந்திருக்கிறார். இவர் ஒரு ஓய்வுபெற்ற பேராசிரியரும்கூட. அதனால் ரிடையர் ஆனாலும் பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லி கொடுத்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த க்ருபா என்ற மாணவி டியூஷன் படிக்க வந்திருக்கிறார்.

    பதிவு திருமணம்

    பதிவு திருமணம்

    அந்த பெண்ணுக்கு வயது 27. ஆகாஷ் மற்றவர்களுக்கு டியூஷன் சொல்லி கொடுத்தாலும் க்ருபா மீது தனி பாசம் ஏற்பட்டிருக்கிறது. எனவே நிறைய உதவிகளை அந்த பெண்ணுக்கு செய்தார். இந்த விஷயம் ஆகாஷை ரொம்பவே ஈர்த்துவிட நாளடைவில் இருவருக்குள்ளும் காதல் உருவானது. எனவே திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர். ஆனால் பெண்ணின் வீட்டில் எப்படியும் ஒத்துக்க மாட்டார்கள் என்பதால், இருவரும் வீட்டை விட்டு போய் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள்.

    ராமேஸ்வரத்தில் ஜோடிகள்

    ராமேஸ்வரத்தில் ஜோடிகள்

    இதற்கிடையே மகளை காணோம் என்றும், ஆகாஷ்தான் தனது மகளை கடத்தி விட்டார் என்றும் போலீசில் கிருபாவின் தந்தை புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசாரும் ஜோடிகளை தேடி வந்தனர். அப்போது ஜாலியாக ஊர் சுற்றி கொண்டிருந்த இருவரையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் ஆகாஷின் பெற்றோர்கள் விரைந்து வந்தனர்.

    வீடியோ வைரல்

    அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறினர். இதைக்கேட்ட க்ருபா பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தங்களால் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஜோடிகளை தாக்கவும் தொடங்கினர். இந்த சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+