69 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம்... தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி : கல்வி, வேலை வாய்ப்பில் 69 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த லோகேஷ்வரி உள்ளிட்ட 8 மாணவ மாணவியர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது...

தமிழக மருத்துவ கல்லுாரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 69 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதனால் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தும் பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களால் மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைப்பதில்லை.
கல்வியில் ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பின்பற்றப்பட்டு இருந்தால் எங்களுக்கு இடம் கிடைத்திருக்கும். இது தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.
எனவே தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக பிறப்பிக்கப்பட்டது போல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் இடங்களை உருவாக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், வழக்கின் விசாரணையை வரும் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications