”க்ரூங்கி மேக்கப்பும், கிளிட்டர் தலை முடியும்”- 2015இல் பேஷன் உலகின் 7 ஸ்பெஷல் டிரெண்ட்ஸ்!
டெல்லி: எத்தனை வருடங்கள் ஆனாலும் பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று "மேக்கப்"... மேக்கப்பையும், பெண்களையும் பிரித்தே பார்க்க முடியாத அளவிற்கு பிண்ணிப் பிணைந்து கிடக்கும் ஒன்று அது.
இந்த நிலையில் கடந்து போக இருக்கும் 2015 ஆம் ஆண்டு மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? அன்றைய மஞ்சளில் இருந்து இன்றைய மஸ்காரா வரை வருடா வருடம் புது புது மேக்கப் யுத்திகள் கொட்டிக் கிடக்க தவறுவதே இல்லை.
அப்படி 2015 ஆம் ஆண்டிலும் சில, பல அழகுக்கு அழகு சேர்க்கும் பேஷன்கள் மேக்கப் உலகை உச்சத்திற்கு கொண்டு சென்றன. அவற்றில் 7 இங்கே உங்களுக்காக...

க்ரூங்கி மேக்கப்:
90களின் இன்ஸ்பிரேஷனாக படையெடுத்த இந்த மேக்கப் டிரெண்ட், வாம்பையர் என்னும் ரத்தக்காட்டேரி ஸ்டைலில் அமைந்திருக்கும். படிய ஒருபக்கமாக வாரிய தலையும், பச்சைக் கண்களும், திக்கான மேட் பினிஷ் லிப்ஸ்டிக்கும் இந்த லுக்கை மீட்டுக் கொடுத்துள்ளன.

பர்பெக்ட் ஆக்னே கவரிங் மேக்கப்:
சென்சிட்டிவ் ஆன தோலுக்கு சரியானது இந்த மேக்கப். முழுவதும் பருக்கள் நிறைந்த முகத்தை கூட ஒரு நொடியில் பூசி மெழுகிவிடும் வகையிலான இந்த மேக்கப் 2015 ஆம் ஆண்டில் படு பிரபலமாகியுள்ளது. இதற்கான வீடியோக்கள் வலைத்தளங்களில் கொட்டிக் கிடக்கின்றன.

கிளிட்டர் ஹேர் ரூட்ஸ்:
தலைக்கு டை அடிப்பது எல்லாரும் தெரியும். கலரிங் கூட இளசுகளிடம் பிரபலம்தான். ஆனால் இந்த ஆண்டு புதிதாக வந்திருக்கும் டிரெண்ட்தான் தலைக்கு நடுவில் ஜிகினாவைக் கொட்டிக் கொள்ளுதல். தலையை வகிடு எடுத்து வாரிவிட்டு நடுமண்டையில் கலர், கலராக நம்ம டிரெஸ்க்கு ஏற்ற வகையில் கலர் கிளிட்டர்களைத் தூவிக்கொள்ளலாம்.

ஸ்ட்ரோபிங்:
காண்ட்டூரிங் என்ற ஒரு விஷயம் மேக்கப் உலகில் உண்டு. முகத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு பகுதியை முன்னிலைப்படுத்தி காமிப்பதற்கு இந்த பெயர். இதற்கு தங்கச்சிதான் இந்த ஸ்ட்ரோபிங். இதில், உங்கள் முகத்தில் இருக்கும் கன்னங்கள், கண்கள், உதடுகளை மட்டும் முன்னிலைப்படுத்தி "ஹைலைட்" ஆக்குவார்களாம்.

ஐ லிட் இல்லுஸ்ட்ரேஷன்:
கண்கள்...இதன் அழகை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஏற்கனவே மான் விழிகள், மீன் விழிகள் என்று வர்ணித்தது போய், கண்களில் இமைகளைச் சுற்றி இதன் மூலம் கடல் கன்னி, மான் , மீன், நட்சத்திரம் என்று எதை வேண்டுமானாலும் வரைந்து கொள்ளலாம் கிளிட்டர்கள், ஐ ஷேட்கள் பயன்படுத்தி. என்ன போட்டுக் கொள்பவருக்கு கொஞ்சம் பொறுமை அவசியமாம்.

ஹேர் டாட்டூ:
கழுத்து, முதுகு என டாட்டூ குத்திக் கொண்டதெல்லாம் அவுட் ஆப் பேஷன். 2015 இல் மிகவும் பிரபலமாக காணப்பட்டது தலையில் வரைந்து கொள்ளும் டாட்டூக்கள்தான். தலையில் ஈசியாக வரைந்து கொள்ளலாம். முடியில் வெட்டிக்கவும் செய்யலாம். நிரந்தரம் மற்றும் தற்காலிகம் என்று இரண்டு வகையுமே இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரிடிசண்ட் கிளாஸ் நெயில் ஆர்ட்:
ஏற்கனவே நெயில் ஆர்ட் இருந்தாலும், இது கிட்டதட்ட கண்ணாடி போன்ற விரல் ஓவியம் ஆகும். கண்ணாடி போல பளபளப்பாக, கிளாஸியாக, கட்டம்கட்டமாக, அறுகோண வடிவங்களில் மின்னும் இந்த ஆர்ட்தான் 2015 ஆம் ஆண்டில் பேஷன்.
2016 வரப்போகுது...இன்னும் நீங்க இதெல்லாம் டிரை பண்ணலையா? சீக்கிரம் போங்க கேர்ள்ஸ்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications