ஜமாதுல் முஜாகுதின் அமைப்பைச் சேர்ந்த 7 தீவிரவாதிகள் வங்காள தேசத்தில் கைது
டாக்கா: வங்காள தேசத்தில் தடை செய்யப்பட்ட ஜமாதுல் முஜாகுதின் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 7 தீவிரவாதிகளை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
வங்காள தேச தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியான மிர்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் தீவிரவாதிகள் இருந்த பகுதியைச் சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் சில மணிநேரம் நீடித்தது. அதைத் தொடர்ந்து போலீசாரும் பதில் தாக்குதலை தொடர்ந்தனர். இறுதியில் தீவிரவாதிகள் 7 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக தீவிரவாதிகள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பொதுமக்கள் அனைவரையும் போலீசார் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து டாக்கா காவல்துறை இணை ஆணையர் கூறுகையில், கைது செய்யப்பட்ட 7 பேரும் ஜமாதுல் முஜாகுதின் வங்காளதேச தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களில் 3 பேர் அந்த இயக்கத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள். தீவிரவாதிகள் தங்கியிருந்த இடத்தில் இருந்து ஏராளமான கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications