மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- 7 போலீசார் பலி
Subscribe to Oneindia Tamil
கச்சிரோலி: மகாராஷ்டிரா மாநிலம் கச்சிரோயில் மாவோயிஸ்டுகள் நட்டத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 7 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கச்சிரோலி மாவட்டம் பவிமுரான்டோ கிராமத்தில் ரோந்து பணி முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது நிலத்தில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியை மாவோயிஸ்ட்டுகள் வெடிக்க செய்துள்ளனர்.
இந்த தாக்குதலில் போலீசார் 7 பேர் சம்பவட இடத்திலேயே பலியாகினர். பலியானவர்கள் அனைவரும் மாவோயிஸ்டுகள் தடுப்புப் பிரிவு சி-60-யைச் சேர்ந்தவர்கள்.
அவர்களது உடல்களை மீட்டு கொண்டு வர கூடுதல் பாதுகாப்பு படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. சில இடங்களில் மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.












Click it and Unblock the Notifications