மோடி பதவியேற்பு விழா மட்டும் ஏன் வித்தியாசமானது?
டெல்லி: நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா ஏன் வித்தியாசமானது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நரேந்திர மோடி இந்தியாவின் 15வது பிரதமராக இன்று மாலை பதவியேற்றார். இதனால் டெல்லியே விழாக்கோலம் பூண்டிருந்தது என்று தான் கூற வேண்டும்.
இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழா மட்டும் ஏன் வித்தியாசமானது என்பதை பார்ப்போம்.

ராஷ்ட்ரபதி பவன்
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த மிகப் பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்று இன்று நடந்த பதவி ஏற்பு விழா. இந்த விழாவில் 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

ஒளிபரப்பு
பதவியேற்பு விழா தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷன் நெட்வொர்க் மூலம் சார்க் நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது.

சார்க்
சார்க் நாடுகளின் தலைவர்கள், தூதரக அதிகாரிகள், ஆளுநர்கள், முதல்வர்கள் என்று முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்திய பிரதமர் பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டாக கலந்து கொண்டது இதுவே முதல் முறை ஆகும்.

டிடி
மோடி பதவியேற்பு விழா தூர்தர்ஷனில் 15 பிராந்திய மொழிகள் உள்ளிட்டவற்றில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு வீடியோ இந்தியா மற்றும் சார்க் நாடுகளைச் சேர்ந்த அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் அளிக்கப்பட்டது.

இசைக்குழு
பதவியேற்பு விழாவின்போது இசைக்குழு தேசபக்தி பாடல்கள் மற்றும் இந்தி படங்களில் வரும் தேசபக்தி பாடல்களை இசைத்தது.

வாகனங்கள்
நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் நடக்க முடியாதவர்களுக்காக 12 கோல்ப் கார்ட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆம்புலன்ஸ்
நிகழ்ச்சி நடந்த இடத்தில் முன்னேற்பாடாக ஆம்புலன்ஸ்கள் மற்றும் டாக்டர் குழுக்கள் ஆங்காங்கே இருந்தார்கள்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications