"கப்பு" பயலுக.... 70% மும்பை ஐஐடி மாணவர்கள் டெய்லியும் குளிப்பதில்லையாம்!
மும்பை: மும்பை ஐ.ஐ.டி.யில் பயிலும் மாணவர்களில் 70% பேர் நாள்தோறும் குளிப்பதே இல்லை என்று ஆய்வறிக்கை ஒன்றில் சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை ஐஐடி மாணவர்களே நடத்தும் பத்திரிகைக்காக ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட சுவாரசிய தகவல்கள்:

நாள்தோறும் குளியல் இல்லை
ஐஐடியில் விடுதியில் தங்கி உள்ள மாணவர்களில் 30% பேர் மட்டுமே நாள்தோறும் குளிக்கின்றனர். மற்றவர்கள் எல்லாம் 10 நாளுக்கு ஒருமுறை, வாரத்துக்கு 2 அல்லது 3 முறைதான் குளிக்கின்றனராம்.

70% பேர் குளிப்பதே இல்லை
அதாவது 70% மாணவர்கள் நாள்தோறும் குளிப்பதே இல்லை. மேலும் 10% பேர்தான் வாரத்துக்கு ஒரு முறை குளியல் போடுகின்றனர். அதுவும் துர்நாற்றம் அடித்தால்தான் இந்த குளியலும் கூடவாம்...

எப்போதாவது
மேலும் 2 அல்லது 3 நாளுக்கு அல்லது எப்போதாவது ஒருமுறை குளிப்பதாக 56% ஐஐடி மாணவர்கள் கூறியுள்ளனர். ஐஐடி மாணவர்கள் இதை சர்வேயில் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

வித் அவுட் கேஸுகள்
70% மாணவர்கள் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் வித் அவுட்டில்தான் செல்கின்றனர். 30% மாணவர்கள்தான் ரெகுலராக டிக்கெட் எடுப்பவர்களாம்.

மது பழக்கம்
ஐஐடிக்கு வந்த பின்னரே மது அருந்த பழகியதாக பெரும்பாலான மாணவர்கள் தெரிவித்தனர். இதில் 33.1% மாணவர்கள் எப்போதாவது மது அருந்துவதாக கூறியுள்ளனர். மேலும் பட்டம் பெற்றபின் 40% விடுதி மாணவர்கள், நண்பர்களுடன் தங்க விரும்புவதா தெரிவித்துள்ளனர்.

கட் அடிப்போர்தான் ஜாஸ்தி
ஐஐடி மாணவர்களில் 39.75 % பேர் பெரும்பாலான வகுப்புகளில் பங்கேற்பதாக கூறியுள்ளனர். ஆனால் 32.5 % மாணவர்கள் சில வகுப்புகளில் மட்டுமே பங்கேற்பதாகவும் கூறினர். 7.5 % மாணவர்கள் மட்டுமே ஒரு வகுப்பு கூட தவறாமல் பங்கேற்றுள்ளனர்.

நூலகம் எங்கே
இவர்களில் 16.2% மாணவர்கள் ஐஐடி வளாகத்தில் உள்ள நூலகத்தின் வாசலுக்கு கூட ஒருநாளும் சென்றதில்லையாம். அதாவது ஐஐடியில் படித்தும் நூலகம் எங்கே என்று கேட்கும் கேட்டகிரி இவர்கள்தான்.0
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications