For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூத்த குடிமக்களின் முதலீட்டுக்கு 8% வட்டி உத்தரவாதம்!!! - அருண் ஜேட்லி

மூத்த குடிமக்களின் முதலீட்டுக்கு 8 சதவீதம் வட்டி உத்தரவாதம் அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: மூத்த குடிமக்களின் முதலீட்டுக்கு 8 சதவீதம் வட்டி உத்தரவாதம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். மூத்த குடிமக்களின் ஆரோக்கிய மேம்பாட்டுக்காக ஆதார் அட்டை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

பொது மற்றும் ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

8% interest on the investment guarantee senior citizens

அப்போது மூத்த குடிமக்களின் முதலீட்டுக்கு 8 சதவீதம் வட்டி உத்தரவாதம் அளிக்கப்படும் என்று அவர் கூறினார். மேலும் அவர்களின் ஆரோக்கிய மேம்பாட்டுக்காக ஆதார் அட்டை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இத்திட்டம் முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அருண்ஜேட்லி அறிவித்தார். அந்த ஸ்மார்ட் கார்டில் முதியோரின் உடல் நல விவரங்கள் முழுமையாக இடம்பெறும் வகையில் இந்த நலத்திட்டம் செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

English summary
Finanace Minister Arun jaitely announced in general budget that 8% interest on the investment guarantee senior citizens. And also he said Aadhaar-based welfare system for the elderly with health information, will also be executed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X