போபால் சிறையில் இருந்து தப்பிய 8 சிமி தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொலை
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பாதுகாவலரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய 8 சிமி தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 சிமி தீவிரவாதிகள் பாதுகாவலரை கொலை செய்துவிட்டு இன்று அதிகாலை தப்பியோடினர்.
தப்பியோடியவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் போபாலின் புறநகர் பகுதியில் உள்ள எய்ன்ட்கேதி கிராமத்தில் வைத்து நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் 8 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநில சிறையில் இருந்து சிமி தீவிரவாதிகள் தப்பியோடியுள்ளது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக போபால் சிறையில் இருந்து 10 சிமி தீவிரவாதிகள் தப்பிச் சென்றனர்.
அதில் 5 பேர் உடனடியாக பிடிக்கப்பட்டனர். ஆனால் மற்றவர்களை பிடிக்க முடியவில்லை. அப்படி தப்பியோடியவர்கள் பல்வேறு குண்டுவெடிப்பு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டனர். அதில் 3 பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர், மீதமுள்ளவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிஷாவில் கைது செய்யப்பட்டனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications