கேரள கோவில் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு
கொல்லம்: கேரள கோவில் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரவூரில் உள்ள புட்டிங்கல் தேவி கோவிலில் வருடாந்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 1 மணி முதல் பட்டாசுகள், வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டது. காலை 3.30 மணி அளவில் பட்டாசு வெடிக்கையில் தீப்பொறி பறந்து சென்று அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு பொட்டலங்களில் பட பெரிய வெடிவிபத்து ஏற்பட்டது.

இதனால் கோவில் வளாகத்தில் தீப்பிடித்து எரிந்ததில் 90 பேர் பலியாகினர், 350 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. காயம் அடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

காயம் அடைந்தவர்கள் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
காயம் அடைந்தவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications