Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி: செம்மரம் வெட்ட வந்தததாக கூறி 84 தமிழர்கள் கைது - இரவில் விடுதலை

திருப்பதி ஆஞ்சநேயபுரத்தில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி 84 தமிழர்களை அதிகாலையில் கைது செய்த ஆந்திரா போலீசார் இரவில் விடுதலை செய்தனர்.

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஆஞ்சநேயபுரத்தில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி 84 தமிழர்களை ஆந்திர போலீசார் அதிகாலையில் கைது செய்தனர். பிணைத்தொகை கட்டிய பின்னர் இரவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் அதிகளவு செம்மரங்கள் காணப்படுகின்றன. இந்த செம்மரங்களை அப்பாவி தமிழர்கள் பலரை பண ஆசை காட்டி பயன்படுத்தி பலர் வெட்டி கடத்தி வருகின்றனர்.

அண்மையில் ஆந்திரமாநிலம் ஒண்டிமிட்டா ஏரியில் 5 தமிழர்கள் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர். செம்மரம் வெட்ட வந்தவர்கள் போலீசாரிடமிருந்து தப்பிக்க எரியில் குதித்து உயிரிழந்ததாக ஆந்திர போலீசார் தெரிவித்தனர்.

84 தமிழர்கள் கைது

84 தமிழர்கள் கைது

ஆந்திரா போலீசாரே தமிழர்களை அடித்துக்கொன்று ஏரியில் வீசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் திருப்பதி ஆஞ்சநேயபுரத்தில் வாகன சோதனையின்போது 84 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

அவர்கள் 84 பேரும் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கைதானவர்களை திருப்பதிக்கு கொண்டு சென்று செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

கட்டட வேலை

கட்டட வேலை

84 பேரும் ஆந்திர பதிவெண் கொண்ட ஒரே லாரியில் விலங்குகளை போல் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கட்டட வேலை மற்றும் சமையல் வேலை செய்வதற்கு எனக் கூறி அழைத்து சென்றதாகவும் நல்ல சம்பளம் கொடுப்பதாக கூறியதாகவும் கைதானவர்கள் தெரிவித்தனர்.

ஆந்திர போலீஸ் ஆலோசனை

ஆந்திர போலீஸ் ஆலோசனை

கைது செய்யப்பட்டவர்களில் கல்லூரி மாணவர்களும் உள்ளனர். இதனிடையே கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ஆலோசனை நடத்தினர்.

ரேணிகுண்டா வட்டாட்சியர்

ரேணிகுண்டா வட்டாட்சியர்

கைது செய்யப்பட்டவர்களில் கல்லூரி மாணவர்களும் உள்ளனர். இதனிடையே கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 84 தமிழர்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

84 பேரும் விடுதலை

84 பேரும் விடுதலை

வனப்பகுதியில் கைதானால் மட்டுமே செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு வழக்குப்பதிவு செய்ய முடியும் என்பதால் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ரேணிகுண்டா தாசில்தாரிடம் பிணைத்தொகை செலுத்தி அனைவரும் விடுதலை பெற்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+