சூனியக்காரி என்று கூறி 85 வயது பாட்டியை அடித்து நிர்வாணப்படுத்திய கிராம மக்கள்
ஜெய்ப்பூர்: சூனியக்காரி என்ற சந்தேகத்தில் 85 வயது பெண் அடித்து நிர்வாணப்படுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள பிஹாரா கிராமத்தைச் சேர்ந்தவர் 85 வயது சௌபாய், இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாய்.

இந்நிலையில், கடந்த ஞாயிறன்று மந்திரவாதி ஒருவரை அழைத்து வந்த கிராமத்தார், சௌபாயை தலைமுடியை பிடித்து வீட்டிற்கு வெளியே இழுத்து வந்துள்ளனர். பின்னர் அவர் மீது ஏதோ திரவத்தை ஊற்றிய கிராமத்தார், அவரை நிர்வாணப்படுத்தி சூடான இரும்புக் கம்பியால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். பின்னர் அவரை வாய்க்கால் ஒன்றில் தூக்கி வீசியுள்ளனர்.
சௌபாயை சூனியக்காரி எனக் கருதி கிராமத்தார் இவ்வாறு செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார் சௌபாய். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தானில் பெண்களை இவ்வாறு சூனியக்காரிகள் எனக் கருதி சித்ரவதை செய்வதற்கு எதிராக சட்டமே உள்ளது. பெண்களை இவ்வாறு கொடுமைப்படுத்துபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் வழங்கப்படுகிறது.
ஆனபோதும், அடிக்கடி இவ்வாறு சூனியக்காரிகள் என முத்திரைக் குத்தப்பட்டு பெண்கள் சித்ரவதை செய்யப்பட்டுவது அங்கு தொடர்கதையாக உள்ளது.
கடந்த சில மாதங்களில் மட்டும் இவ்வாறு பல்வேறு புகார்கள் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பில்வாரா மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்று நாட்களில் இவ்வாறு மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications