ராணுவ சர்வாதிகார ஆட்சி அமைய 53% கல்லூரி மாணவர்கள் ஆதரவு! பெண்கள் "அடிவாங்க" 87% பேர் ஆதரவு!!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டில் ராணுவ சர்வாதிகார ஆட்சி அமைவதற்கு 53% கல்லூரி மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பெண்கள் தங்கள் மீதான வன்முறையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று 87% மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக "Indiaspend" இணையதளம் மாணவர்களிடையே பல்வேறு கருத்து கணிப்புகளை நடத்தியது. நாடு முழுவதும் மொத்தம் 11 மாநிலங்களில் 10,542 மாணவர்களிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் 6,168 பேர் பள்ளி மாணவர்கள்; 4,374 பேர் கல்லூரி மாணவர்கள். பெங்களூர், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத், குவஹாத்தி, போபால் என பல நகரங்களில் இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன் முடிவு விவரங்கள்:
- இந்திய குடிமக்கள்தானா என்பது தெரியாது என்கின்றனர் 65% பள்ளி குழந்தைகள்
- பெண்கள் தங்கள் மீதான வன்முறைகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை என்கின்றனர் 87% கல்லூரி மாணவர்கள்
- பெண்களைப் பொறுத்தவரை வீட்டு வேலை பார்த்துக் கொண்டு குழந்தைகளை பெற்றெடுத்து வளர்க்க வேண்டும் என்கின்றனர் 51% கல்லூரி மாணவர்கள்
- உரிமை மற்றும் பொறுப்பு சார்ந்த விஷயங்கள் குறித்து 27% பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது.. கல்லூரி அளவில் 31% மாணவர்கள் அறிந்திருக்கின்றனர்.
- 35% பள்ளி மாணவர்களே தாங்கள் இந்தியக் குடிமகன் என உணர்ந்திருக்கின்றனர்.
- நாட்டில் ராணுவ ஆட்சி அமைய வேண்டும் என 53% கல்லூரி மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
- வரதட்சணை கொடுப்பதை 36% பெண்களும் 44% கல்லூரி செல்லும் மாணவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.
- வீட்டு பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட சலுகைகளைக் கேட்கக் கூடாது என 49% பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- பெற்றோர் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்களால் தாங்கள் தண்டிக்கப்படுகிறோம் என 49% பள்ளி மாணவர்கள் கூறுகின்றனர்.
- வீட்டில் இருக்கும் போது தேர்வை நினைத்து கவலைப்படுவதாக 82% பள்ளி மாணவர்கள் கூறியுள்ளனர்.
- வகுப்புகளில் தங்களுக்கு தோன்றுகிற கருத்துகளை வெளிப்படுத்த அஞ்சுவதாக 63% பள்ளி மாணவர்கள் கூறுகின்றனர்.
- பள்ளிகளில் பல்வேறு காரணங்களுக்காக தாங்கள் அடிவாங்கியிருப்பதாக 61% மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications