உத்தரப் பிரதேசத்தில் அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.... 9 பேர் பலி
அமேதி: உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பேருந்து ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 9 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி மாவட்டம் பெபார்பூர் பகுதியில் சுல்தான்பூரை நோக்கி 42 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ராம்கோவான் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென பேருந்து தீப்பிடித்தது.

பேருந்தின் என்ஜினில் பிடித்த தீ மளமளவென பரவியது. ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த பயணிகள் சிலர், ஜன்னல் கதவுகளை உடைத்து உயிர் தப்பினர். ஆனபோதும், தீயின் கோர நாக்குகளுக்கு 9 பயணிகள் பலியாயினர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இறந்தவர்கள் சடலங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பேருந்தின் என் ஜினில் ஏற்பட்ட கோளாறே தீ விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications