டெல்லியில் பயங்கரம்: 11 வயது சிறுமியை கடத்தி மதராசாவில் வைத்து நாள் முழுக்க சீரழித்த காம கொடூரன்

டெல்லியில் 11 வயது சிறுமியை கடத்தி மதராசாவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

காஸியாபாத்: டெல்லியில் 11 வயது சிறுமியை கடத்தி மதராசாவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு டெல்லியின் காஸிபூர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த 21ஆம் தேதி திடீரென மாயமானார். இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இளைஞர் ஒருவர் சிறுமியை கடத்தியது தெரியவந்தது.

இளைஞர் கைது

இளைஞர் கைது

இதைத்தொடர்ந்து காஸியாபாத் அருகே உள்ள ஒரு மதராசாவில் சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்த போலீசார் சிறுமியை மீட்டனர். மேலும் சிறுமியை 24 மணி நேரம் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த அந்த இளைஞரையும் போலீசார் கைது செய்தனர்.

17 வயது மைனர்

17 வயது மைனர்

பலாத்காரம் செய்த இளைஞர் 17 வயதே ஆன மைனர் என கூறப்படுவதால் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்படுகிறது. சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.

மரண தண்டனைக்கு கோரிக்கை

மரண தண்டனைக்கு கோரிக்கை

சிறுமி பலாத்கார சம்பவம் தொடர்பாக மதராசா நிர்வாகத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என காஸிபூர் பகுதியில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

மரண தண்டனைக்கு ஒப்புதல்

மரண தண்டனைக்கு ஒப்புதல்

அண்மையில் காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+