இஎஸ்ஐ மருத்துவமனையில் 11 வயது சிறுமி கதற கதற பலாத்காரம்.. துப்புரவு பணியாளர் வெறிச்செயல்!
டெல்லி இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுமி அங்கு பணிபுரியும் துப்புரவு பணியாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுமி அங்கு பணிபுரியும் துப்புரவு பணியாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகர்புறம் கிராமபுறம் என்ற பாகுபாடில்லாமலும் பெண்கள், சிறுமிகள் என்ற பாரபட்சம் இன்றியும் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் டெல்லி இஎஸ்ஐ மருத்துவமனையில் 11 வயது சிறுமி துடிக்க துடிக்க பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஎஸ்ஐ மருத்துவமனை
டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கடந்த 13-ம் தேதி 11 வயது சிறுமி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.

துப்புரவு பணியாளர்
இதையடுத்து வலியை குறைக்க மருந்து கேட்பதற்காக தனது வார்டில் இருந்து தனியாக வெளியே வந்தார் அந்த சிறுமி. அப்போது அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க பணியாளர் ஒருவர் சிறுமியை பார்த்து என்ன வேண்டும் என விசாரித்துள்ளார்.

அறைக்கு அழைத்து சென்றார்
அப்போது சிறுமி தனக்கு தாங்க முடியாத அளவுக்கு வயிறு வலி இருப்பதாகவும் அதற்கு மருந்து வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதனைக் கேட்ட அந்த பணியாளர் மருந்து தருவதாக கூறி தனது அறைக்கு அந்த சிறுமியை அழைத்து சென்றார்.

கதற கதற பலாத்காரம்
பின்னர் நோயாளி சிறுமி என்று கூட பார்க்காமல் அவரை கதற கதற பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி எவ்வளவோ கெஞ்சியும் விடாமல் அந்த பணியாளர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

துப்புரவு பணியாளர் கைது
இதுகுறித்து போலீசில் இன்று காலை புகார் அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த ஒப்பந்த பணியாளரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications