தண்ணி தாங்க! உடல் முழுக்க ரத்தம்! ஆடையின்றி வீடு வீடாக போன சிறுமி! ஷாக் பலாத்காரம்! துரத்திய மக்கள்
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினில் 12 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகி இருக்கும் சில தகவல்கள் மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினில் இருந்து 15 கிமீ தூரத்தில் இருக்கும் பாத்நகர் என்ற பகுதியில் நடந்து உள்ளது. இதில் அந்த சிறுமிக்கு எப்படி தாக்குதல் நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.

பாத்நகர் பகுதியில் நேற்று அந்த சிறுமி உடையின்றி உடல் முழுக்க ரத்தத்தோடு நடந்து சென்றுள்ளார். முக்கியமாக சிறுமி உறுப்பில் ரத்தத்தோடு அவர் நடந்து சென்றுள்ளார். அவர் அங்கே இருக்கும் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் கதவை தட்டி உதவி கேட்டுள்ளார்.
எனக்கு ஆடை இல்லை. உடலில் ரத்தமாக இருக்கிறது. அதனால் என்னை காப்பாற்றுங்கள். எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எனக்கு உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அனைத்து சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. அவர் உதவி கேட்ட எல்லா வீட்டிலும் உள்ள ஆண்கள், பெண்கள் அவரை துரத்தி அடித்து உள்ளனர். நீ உள்ளே வரக்கூடாது. வெளியே போ என்று துரத்தி அடித்துள்ளனர். சிலர் அவரிடம் பேசாமல் கூட.. சூ.. சூ என்று கூறி துரத்தி அடித்துள்ளனர்.
சிலரிடம் எனக்கு உதவி வேண்டாம். எனக்கு தண்ணீர் கொடுங்கள் என்றாவது அந்த சிறுமி உதவி கேட்டுள்ளார். ஆனால் அதுவும் கூட அவருக்கு கிடைக்கவில்லை. போலீசார் அளித்த தகவலின் படி, , சிறுமி இறுதியில் ஒரு ஆசிரமத்தை அடைந்தார். அங்கேதான் அவருக்கு உதவி வழங்கப்பட்டு உளது. அங்கே ஒரு சாமியார் சிறுமியை ஒரு துண்டுடன் மூடி, மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அதோடு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். மாவட்ட மருத்துவமனையில் சிறுமியின் மருத்துவப் பரிசோதனையில் பலாத்காரம் உறுதி செய்யப்பட்டது. கூட்டு பலாத்காரம் அவர் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு அந்த சிறுமி மிக மோசமாக தாக்கப்பட்டு இருக்கலாம், கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அந்த சிறுமியால் பேச முடியவில்லை. அவரின் வாய் உடைக்கப்பட்டு உள்ளது. இதனால் கஷ்டப்பட்டு பேசி உள்ளார். இதன் காரணமாக அவரால் எதையும் சொல்ல முடியவில்லை. அவருக்கு சுயநினைவில் பிரச்சனை உள்ளது.
அவரின் பேச்சை பார்த்தால் அவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவருக்கு ரத்தம் கொடுக்க கூட யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் போலீசாரே கடைசியில் அவருக்கு ரத்தம் கொடுத்தனர். அவர் மீது யார் இந்த தாக்குதல் நடத்தியது என்று இன்னும் தெரியவில்லை.
அவரின் பெற்றோர் யார், அந்த சிறுமி எங்கிருந்து வந்தார் என்றும் தெரியவில்லை. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications