Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ம.பி.யில் கொடூரம்.. 14 வயது சிறுமியை 2 நாள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த ஐவர்!

மத்தியப்பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் 2 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    2 நாட்களாக சிறுமியை அடைத்து வைத்து வன்புணர்வு செய்தவர்கள் கைது- வீடியோ

    சிந்த்வாரா: மத்தியப்பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் 2 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு அடுத்தடுத்து 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு அரசும் நீதிமன்றங்களும் கடுமையான தண்டனைகளை விதித்து வருகின்றன.

    இருப்பினும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை. குறிப்பாக டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

    சிறுமி கூட்டு பலாத்காரம்

    சிறுமி கூட்டு பலாத்காரம்

    இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் 24 மணி நேரத்தில் 5 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    மத்திய பிரதேச மாநிலம் குன்டிபூரா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 6ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

    போலீஸில் புகார்

    போலீஸில் புகார்

    இரவு நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய சிறுமியின் பெற்றோர் மறுநாள் குன்டிபூரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    மயங்கிய நிலையில் மீட்பு

    மயங்கிய நிலையில் மீட்பு

    இதையடுத்து காவல் கூடுதல் கண்காணிப்பாளர் நீரஜ் சோனி தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மஹுவா தோலா பகுதிய்ல சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கடத்தி சென்று பலாத்காரம்

    கடத்தி சென்று பலாத்காரம்

    சிறுமியை மீட்ட போலீசார் அவரிடம் நடந்தது குறித்து விசாரித்தனர். அப்போது மோகித் பரத்வாஜ் என்ற 22 வயது இளைஞரும் ராகுல் போண்டே என்ற இளைஞரும் அவர்களது வீட்டிற்கு கடத்தி சென்று தன்னை பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

    மறுநாள்தான் விட்டனர்

    மறுநாள்தான் விட்டனர்

    அன்றிரவு முழுவதும் தங்களின் வீட்டிலேயே அடைத்து வைத்து மாறி மாறி பலாத்காரம் செய்ததாகவும் மறுநாள்தான் தன்னை வெளியே செல்ல அனுமதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    மீண்டும் இழுத்துச்சென்று

    மீண்டும் இழுத்துச்சென்று

    மறுநாள் வெளியே வந்த அவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது பன்டி பாலவி(23) அங்கீத் ரகுவான்ஷி(25) அமித் விஷ்வகர்மா(21) ஆகிய மூன்று இளைஞர்களும் தன்னை மீண்டும் போண்டேவின் வீட்டிற்கு இழுத்து சென்று மாறி மாறி பலாத்காரம் செய்தனர் என்றும் அந்த சிறுமி கதறியுள்ர்.

    போஸ்கோ சட்டத்தில் கைது

    போஸ்கோ சட்டத்தில் கைது

    இதைத்தொடர்ந்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்ட போலீசார் 5 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கூட்டு பலாத்காரம், குற்றம்சார்ந்த அச்சுறுத்தல், கடத்தல், தவறான நோக்கத்துக்காக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் போக்ஸோ சட்டத்தின் கீழும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+