வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி கத்திமுனையில் பெண் கூட்டு பலாத்காரம்.. பெங்களூரில் ஷாக்
வேலை வாங்கித் தருவதாக கூறி பெங்களூருவில் பெண் ஒருவர் 4 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: வேலை வாங்கித் தருவதாக கூறி பெங்களூருவில் பெண் ஒருவர் 4 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 4 பேரையும் தேடி வருகின்றனர்.
தக்ஷின கன்னட பகுதியைச் சேர்ந்த 27 வயது திருமணமான பெண் ஒருவர் தனக்கு தெரிந்த மஞ்சு என்பவர் மூலம் வேலைக்கு முயற்சித்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மஞ்சு அந்த பெண்ணுக்கு போன் செய்து பொருத்தமான வேலை ஒன்று இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் உடனடியாக பெங்களூருக்கு புறப்பட்டு வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை நம்பி அந்தப் பெண்ணும் புறப்பட்டு பெங்களூருக்கு வந்துள்ளார்.

வேலை வாங்கித் தருவதாக கூறி..
அதிகாலை ஜலஹள்ளி வந்த அந்தப்பெண் மஞ்சுக்கு போன் செய்துள்ளார். இதையடுத்து ஆட்டோவில் தனது நண்பருடன் அங்கு வந்த மஞ்சு, அந்தப்பெண்ணை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். போகும் வழியில் மேலும் 2 பேர் ஆட்டோவில் ஏறியுள்ளனர். இதுகுறித்து அந்தப் பெண் கேட்டபோது வேலை விஷயமாக உதவ வந்துள்ளார்கள் என கூறியுள்ளனர்.

4 பேர் கூட்டு பலாத்காரம்
இதையடுத்து அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்புக்கு அந்த பெண்ணை அழைத்து சென்ற 4 பேரும், அவரை குளித்துவிட்டு இண்டர்வியூக்கு ரெடியாக இருக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர். ஒரு மணி நேரம் கழித்து வந்த அவர்கள், அந்தப் பெண்ணை கத்தி முனையில் பலாத்காரம் செய்துள்ளனர்.

கழிவரையில் பூட்டிவிட்டு தப்பிய பெண்
மாலை 5.30 மணிவரை அந்தப் பெண்ணை அவர்கள் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாலை 6 மணிக்கு 3 பேர் வெளியே சென்றுள்ளனர். இதையடுத்த காவலுக்கு இருந்த நபரை கழிவறையில் அடைத்து வைத்த அந்தப் பெண் தப்பியுள்ளார்.

போலீசார் வலைவீச்சு
இதையடுத்து ஹொரமாவு பகுதி ஆஸ்ரமத்தில் உள்ள தனது குழந்தைகளை பார்த்த அந்தப் பெண், பின்னர் மறுநாள் காலை 6 மணிக்கு தனது சொந்த ஊருக்கு செல்ல இருந்த அந்தப் பெண் நடந்த கொடுமைகளையெல்லாம் எண்ணி குற்றவாளிகளுககு தண்டனை வாங்கித்தர முடிவு செய்தார். அதன்படி நடந்தவற்றை கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 4 பேரையும் தேடி வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications