ஆறுமாதமாக பாலியல் தொல்லை... மூன்று வயது சிறுமிக்கு பள்ளி நிறுவனர் செய்த கொடுமை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மூன்று வயது சிறுமிக்கு ஆறுமாதமாக பாலியல் தொல்லை...வீடியோ

  மும்பை: மும்பையை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மூன்று வயது சிறுமிக்கு அவள் பள்ளியின் நிறுவனர் பாலியல் தொந்தரவு கொடுத்து இருக்கிறார். ஆறுமாதமாக அந்த சிறுமிக்கு அந்த நிறுவனர் பாலியல் தொல்லை கொடுத்தது தற்போது தெரிய வந்து இருக்கிறது.

  இந்த கொடூரமான சம்பவத்தில் தற்போது அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவரும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

  கடந்த ஆறுமாதமாக நடந்த வந்த இந்த விசாரணையில் தற்போதுதான் விடை கிடைத்து இருக்கிறது. பள்ளியின் நிறுவனரே இப்படி ஒரு காரியத்தை செய்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

   பாலியல் தொல்லை

  பாலியல் தொல்லை

  மும்பையின் அந்தேரி என்ற பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் படித்து வந்தார் அந்த 3 வயது சிறுமி. அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனைக்கு அழைத்து சென்றும் அவளுக்கு சரியாகமல் இருந்து இருக்கிறது. இதையடுத்து சந்தேகம் அடைந்து அவளது பெற்றோர் விசாரித்து இருக்கின்றனர். அதில் அவளுக்கு யாரோ பாலியல் தொல்லை கொடுத்து தெரிய வந்து இருக்கிறது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் போலீசுக்கு புகார் அளித்து இருக்கின்றனர்.

   நிறுவனர் செய்த குற்றம்

  நிறுவனர் செய்த குற்றம்

  முதலில் போலீஸ் நேரடியாக விசாரணை செய்யாமல் பள்ளி இணையதளத்தில் இருக்கும் புகைப்படங்களை கட்டி விசாரித்து இருக்கின்றனர். அதன்பின் பள்ளியில் வேலை செய்யும் 75 பேரிடம் விசாரணை செய்தனர். இதையடுத்து பள்ளியின் நிறுவனர்களில் ஒருவர் மீது சந்தேகம் வரவே அவரது புகைப்படத்தை காட்டி அந்த சிறுமியிடம் விசாரணை செய்து உள்ளனர். கடைசியில் பள்ளியின் நிறுவனர்தான் இந்த குற்றத்தை செய்தது என கண்டுபிடிக்கப்பட்டது.

   ஆறுமாதமாக நடந்தது

  ஆறுமாதமாக நடந்தது

  57 வயது நிரம்பிய அந்த பள்ளியின் நிறுவனர் அதன்பின் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். அந்த விசாரணையில் அவர் கடந்த வருடம் டிசம்பரில் இருந்து இந்த வருடம் மே மாதம் வரை 6 மாதம் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதை ஒப்புக் கொண்டார். மேலும் நிறைய முறை பள்ளியில் அந்த சிறுமியை இவர் அடித்து கொடுமைப்படுத்திய நிகழ்வும் நடந்து இருக்கிறது.

   ஆசிரியரும் உடந்தை

  ஆசிரியரும் உடந்தை

  இந்த நிலையில் தற்போது பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவரும் இந்த குற்றத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. தினமும் அந்த ஆசிரியர்தான் இந்த சிறுமியை அழைத்து சென்று நிறுவனரிடம் விட்டு இருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த ஆசிரியரும் இந்த சிறுமியை பல முறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் இருக்கின்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A 3 year old girl harassed by school founder in Mumbai . The Mumbai police has arrested the 57-year-old trustee and co-founder of the school yesterday for allegedly sexually assaulting her. They have arrested her class teacher also.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற