புனித நதி என்றும் பாராமல் கங்கையில் பெண் பலாத்காரம்.. மதச்சடங்கை நிறைவேற்றிய போது நேர்ந்த கொடூரம்!
கங்கையில் மத சடங்கை நிறைவேற்றிய போது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா: கங்கையில் மத சடங்கை நிறைவேற்றிய போது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களும் சிறுமிகளும் பாலியல் குற்றங்களுக்கு ஆளாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்ச்கள், கோவில்கள், புனித இடங்கள், மக்கள் கூட்டம் நிறைந்த பகுதி என்ற பாகுபாடின்றி வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் கொடி கட்டி பறக்கின்றன.
முன்பெல்லாம் மறைவான இடத்தில் வைத்து பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தற்போது வெட்ட வெளிச்சமாகவே நடைபெறுகிறது. மேலும் அந்த கொடூரத்தை வீடியோ எடுத்து ரசிக்கும் மனோநிலையும் அதிகரித்துவிட்டது.

கங்கையில் மூழ்க சென்ற பெண்
பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த திங்கள் கிழமை 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது மத சடங்கிற்காக கங்கை நதியில் மூழ்கிவர இறங்கியிருக்கிறார். அப்போது இரு ஆண்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.

பலாத்காரம்
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் புனித நதியான கங்கையை கருத்தில் கொண்டு அதன் புனிதத்தை நினைத்தாவது தன்னை விட்டு விடுமாறு கெஞ்சி கதறியுள்ளார். ஆனால் அதையெல்லாம் கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளாத அந்த இரண்டு நபர்களும் அந்த நடுத்தர வயது பெண்ணை கதற கதற பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

வீடியோ வெளியீடு
அதில் ஒரு நபர் அந்த கொடூரத்தை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துள்ளான். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவ மகளிர் அமைப்புகள் கொந்தளித்துள்ளன.

இறங்கிய எஸ்பி
இதில் மேலும் கொடுமையான விஷயம் என்னவென்றால் ஊர் மக்கள் உதவியுடன் அந்த பெண் புகார் அளித்தும் போலீசார் அதுகுறித்து எப்ஐஆர் பதிவு செய்ய மறுத்துள்ளனர். வீடியோ விவகாரம் மாவட்ட எஸ்பி வரை செல்லவே உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications