பிரிட்டனிலிருந்து ரஷ்யா வரை 1200 மைல்கள் பயணித்த வெளவால் – பூனையால் கொல்லப்பட்ட பரிதாபம்

Subscribe to Oneindia Tamil
வெளவால்
Getty Images
வெளவால்

லண்டனிலிருந்து ரஷ்யாவிற்கு 1200 மைல்கள் (2 ஆயிரம் கி.மீ.க்கு மேல்) பறந்துவந்த வெளவால் பூனை ஒன்றால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.

மனிதனின் கட்டைவிரல் அளவே உள்ள அந்த வெளவால் ரஷ்யாவின் ஸ்கோவ் பகுதியில் கண்டறியப்பட்டது.

அந்த வெளவாலின் இறக்கையில் லண்டன் உயிரியல் பூங்காவின் அடையாளக்குறி இருந்தது. வெளவால் ஆர்வலர்களால் அது மீட்கப்பட்டது. இருப்பினும் பின்னர் உயிரிழந்துவிட்டது.

பிரிட்டனிலிருந்து ஐரோப்பாவை கடந்து இத்தனை தூரம் பறந்து ரஷ்யாவுக்கு வந்து, அத்தனை பிரிட்டன் சாதனைகளையும் முறியடித்துள்ளது.

இந்த பெண் வெளவால் வெறும் 8 கிராம் அளவிலேயே இருக்கும். ரஷ்யாவின் மால்கினோ என்னும் கிராமத்தில் வெட்லானா லாபினா என்பவரால் இந்த வெளவால் கண்டறியப்பட்டது. அதன்பின் இதுகுறித்து பிரிட்டனில் உள்ள வெளவால் பாதுகாப்பு அமைப்பிற்கு தெரியப்படுத்தப்பட்டது.

வெளவால் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் லிசா வோர்லெட்ஜ் இதுகுறித்து கூறுகையில், "இது ஒரு குறிப்பிடத்தகுந்த பயணம் இதுவரை எந்த வெளவாலும் இவ்வளவு தூரம் பிரிட்டனிலிருந்து ஐரோப்பாவை கடந்து பயணித்தது இல்லை. அது நிச்சயம் ஒலிம்பிக் வீராங்கனைதான்" என்றார்.

"மேலும் வெளவாலின் இந்த பயணம் ஒரு ஆச்சர்யமிக்க அறிவியல் கண்டுபிடிப்பு. வெளவால்களின் இடம்பெயர்வில் உள்ள மர்மத்தின் மற்றொரு புதிர் இது. Nathusius' pipistrelles எனப்படும் இந்த வகை வெளவால்கள், பிரிட்டன் முழுவதும் சுற்றித் திரிவதும், ஐரோப்பாவில் உலா வருவதும் ஒரு மர்மம்தான்." என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

2016ஆம் ஆண்டு லண்டனில் வெளவால்கள் குறித்து பிரயன் பிரிக்ஸ் என்பவர் கணக்கெடுத்த பின் அந்த வெளவாலின் இறக்கையில் வளையம் ஒன்று மாட்டிவிடப்பட்டது.

"எனக்கு மிகுந்த ஆர்வமாக உள்ளது. இம்மாதிரியான சிறப்பான உயிரினங்களை காக்கும் சர்வதேச பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன் வாழ்க்கை குறித்து தெரிந்துகொள்வதும் எனக்கு சுவாரஸ்யமாகவுள்ளது."

இந்த வெளவாலுக்கு முன்னதாக 2019ஆம் ஆண்டு இதே வகையான வெளவால் ஒன்று லாட்வியாவிலிருந்து ஸ்பெயின் வரை பயணித்துள்ளது. அது பயணித்த தூரத்தின் அளவு 1,382 கிலோ மீட்டர்கள்.

இந்த Nathusius' pipistrelle வெளவால்களின் இடம்பெயர்வு பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடையதாகவுள்ளது. பருவநிலை மாற்றம் குறித்த எதிர்கால கணிப்பில் இம்மாதிரியான மேலும் பல தாக்கங்கள் உயிரினங்கள் மீது ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை வெளவால்களின் இனப்பெருக்கம், மற்றும் இடம் பெயர்வு நடவடிக்கையை கண்காணிக்க பிரிட்டனில் 2014ஆம் ஆண்டு திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது அப்போதிலிருந்து பிரிட்டனில் இந்த வகை வெளவால்கள் 2,600க்கும் மேற்பட்டவை கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+