பெண் துணை ஆட்சியர் தலை முடியை இழுத்து பளார்.. பாஜக தொண்டர்கள் அராஜகம்.. சிஏஏ ஆதரவு போராட்டத்தில்!
மத்திய பிரதேசத்தில் நடந்த சிஏஏ ஆதரவு போராட்டத்தில் பாஜக தொண்டர்கள் அங்கிருந்த துணை ஆட்சியர் தலை முடியை பிடித்து இழுத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
போபால்: மத்திய பிரதேசத்தில் நடந்த சிஏஏ ஆதரவு போராட்டத்தில் பாஜக தொண்டர்கள் அங்கிருந்த துணை ஆட்சியர் தலை முடியை பிடித்து இழுத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரும் எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது சட்டமானது. நாடு முழுக்க இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிராக நாடு முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சில இடங்களில் சிஏஏவிற்கு ஆதரவாகவும் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முக்கியமாக பாஜக ஆளாத மாநிலங்களில், மக்களுக்கு பிரச்சாரம் செய்யும் வகையில் பாஜக சார்பாக இந்த போராட்டம் நடக்கிறது.

போராட்டம் எங்கு
அதன்படி மத்திய பிரதேசத்தில் ராஜ்கார்க் பகுதியில் நேற்று போராட்டம் நடந்தது. ஆனால் இந்த போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.போலீஸ் அனுமதி அளிக்காத நிலையிலும் அங்கு முறையின்றி கூடிய பாஜகவினர் போராட்டம் செய்துள்ளனர். பாஜகவின் முக்கிய செயலாளர்கள் சிலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஆட்சியர் வந்தார்
அங்கு வந்த ராஜ்கார்க் ஆட்சியர் நிதி நிவேதா, பாஜக தொண்டர்கள் உடன் வாக்குவாதம் செய்தார். அதேபோல் துணை ஆட்சியர் பிரியா வர்மாவும் அங்கே வந்து பாஜக தொண்டர்களை கலைந்து செல்ல கோரிக்கை வைத்தார். இதனால் அங்கு பாஜகவினர் மற்றும் ஆட்சியர், துணை ஆட்சியர் இடையே கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டது.
|
அறைந்தார்
அப்போது அங்கு பாஜக தொண்டர்கள் சிலர் ஆட்சியர் நிதி நிவேதாவிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த நிதி நிவேதா, பாஜக தொண்டர் ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இது வீடியோவாக வெளியாகி உள்ளது.

தலை முடியை
ஆட்சியருக்கு எதிராக பாஜக தொண்டர்கள் கோஷம் எழுப்ப தொண்டங்கினார்கள். அப்போது அங்கு வந்த சில பாஜக தொண்டர்கள், துணை ஆட்சியர் பிரியா வர்மா தலை முடியை பிடித்து இழுத்தனர். தலை முடியை பிடித்து பிரியா வர்மாவை அழைத்து சென்றனர். ஆம், தலை முடியை பிடித்து துணை ஆட்சியரை தர தரவென இழுத்து சென்றுள்ளார். இதையடுத்து அங்கு உடனே போலீஸ் வந்தது.

போலீஸ் பாதுகாப்பு
ஆட்சியர்கள் இருவரையும் போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் வீடியோவாக இணையம் முழுக்க வெளியாகி வைரலாகி உள்ளது. வடஇந்தியாவில் ஆட்சியர் ஒருவருக்கே இப்படி நிலைமை ஏற்பட்டு இருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பாஜக தொண்டர்கள் மீது எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.
-
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு












Click it and Unblock the Notifications