என்னாது இந்த லாக்டவுனால் வொர்க் பிரஷரா.. அப்ப இதை என்னான்னு சொல்வீங்க.. வைரலாகும் வீடியோ
அமிருதசரஸ்: கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுனால் ஏற்பட்டுள்ள பணி பளுவை குறைக்க மண மேடையிலும் பெண் ஒருவர் பணியாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தகவல் தொழில்நுட்பம், தொழில்துறை, கல்வித் துறை என பெரும்பாலானவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெரும்பாலானோர் வொர்க் பிரம் ஹோம் எனும் வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகிறார்கள்.
என்னதான் தற்போது இந்தியாவில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், குறிப்பிட்ட சதவீதம் பேரை வொர்க் பிரம் ஹோமில் இருந்து பணியாற்றுமாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அலப்பறைகள்
இந்த நிலையில் வொர்க் பிரம் ஹோம் அலப்பறைகளை பார்த்துள்ளோம். ஏராளமான மீம்ஸ்கள் வந்துள்ளன. வீடியோ காலில் மேனேஜருடன் ஆலோசனையில் இருக்கும் போது குழந்தைகள் பலர் சேட்டை செய்வது, பந்து விளையாடும் போது மீட்டிங்கில் இருக்கும் தந்தை, தாயின் முகத்தில் தூக்கி எறிவது போன்ற செயல்கள் இணையதளத்தில் உலா வருகின்றன.

லேப்டாப்
இந்த நிலையில் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என்பதுபோல் மணமேடையில் லேப்டாப்பில் ஒரு பெண் பணியாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு பஞ்சாபி வீட்டு திருமணத்தில்தான் இது போன்று நடைபெறுகிறது. வீடியோவில் இருக்கும் அந்த பெண் ஒரு கையில் மொபைல் போனையும் மறு கையில் லேப்டாப்பையும் வைத்து கொண்டு பரபரப்பாக வேலை பார்க்கிறார்.

பொறுமை
உடனிருக்கும் மணமகன் பொறுமையாக அருகிலிருந்து இதை கவனித்து வருகிறார். சுமார் 13 வினாடிகள் இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது. இது பார்க்கும் பலர் அடப்பாவமே, வாழ்வில் ஒரு முறை வரும் திருமணத்தை ரசித்து ருசித்து அனுபவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதே என்கிறார்கள்.

விடுப்பு
இன்னும் சிலரோ ஹோ பல்லே பல்லேனு மாப்பிள்ளையுடன் பாடி ஆடி மகிழ்வதை விட்டு விட்டு இங்குவந்துமா வேலை பார்ப்பது என்கிறார்கள். இன்னும் சிலரோ இந்த பொண்ணு ரொம்ப ஓவர்தான். என்னதான் வேலை இருந்தாலும் திருமணம் என்று கூறியும் விடுப்பு கொடுக்காத நிறுவனம் இருக்கிறதா என்ன என கேட்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications