ஓடிபி சொல்ல இவ்ளோ நேரமா?.. சண்டையிட்ட ஓலா டிரைவர்.. குடும்பத்தினர் கண்முன்னே ஐடி ஊழியர் அடித்து கொலை
கேளம்பாக்கம்: கேளம்பாக்கம் அருகே ஓஎம்ஆர் சாலையில் ஓடிபியை சொல்ல தாமதித்த பயணிக்கும் ஓட்டுநருக்கும் ஏற்பட்ட தகராறில் மனைவி குழந்தைகளின் கண் முன்னே ஐடி ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் கிராமம், குந்தன் நகர் பகுதியைச் சேர்ந்த உமேந்தர். இவர் கோயம்புத்தூரில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.
சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு சனிக்கிழமை காலை கன்னிவாக்கத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் குடும்பத்துடன் சினிமா பார்க்க முடிவு செய்தார்.

கன்னிவாக்கம்
இதையடுத்து கன்னிவாக்கம் வீட்டிலிருந்து மனைவி பவ்யா, குழந்தைகள் அக்ரேஷ், கருண், பவ்யாவின் சகோதரி தேவிப்பிரியா மற்றும் அவரது இரு குழந்தைகள் உள்பட 7 பேருடன் ஓலா கார் மூலம் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு மாலுக்கு சென்றுள்ளார். படம் பார்த்து விட்டு வீடு திரும்புவதற்காக பாவ்யா சகோதரி தேவிப் பிரியாவின் செல்போனில் இருந்து ஓலா கார் புக்கிங் செய்துள்ளனர்.

ஓடிபி எண்
சிறிது நேரத்தில் கார் வந்ததும் அனைவரும் காரில் ஏறியுள்ளனர். கார் ஓட்டுநர் ரவி என்பவர் ஓ.டி.பி எண்ணை சொல்லுமாறு கேட்டுள்ளார். அப்போது ஓலா ஆப்பில் பார்க்காமல் தனது செல்போனில் உள்ள குறுஞ்செய்தி இன்பாக்சில் ஓ.டி.பி.யை தேடியுள்ளார். சிறிது நேரம் பொறுமை காக்காமல் கோபமடைந்த கார் ஓட்டுநர் ஓ.டி.பி. வரவில்லை என்றால் காரை விட்டு இறங்குமாறு கூறியுள்ளார்.

இறங்க மறுத்த உமேந்தர்
அதற்கு இறங்க முடியாது என்று உமேந்தரும் உடன் வந்தவர்களும் கூறியதாக தெரிகிறது. இதனால் பயணிகளுக்கும் ஓட்டுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காரை விட்டு இறங்கிய உமேந்தர், காரின் கதவை வேகமாக சாத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் ரவி ஏன் என்னுடைய கார் கதவை வேகமாக சாத்தினாய் என்று கேட்டு உமேந்தரை அடித்துள்ளார்.

ஓட்டுநர் ரவி
அதேபோல் ஓட்டுநர் ரவியை, உமேந்தர், கூல்ட்ரிங்ஸ் பாட்டிலால் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் ரவி, உமேந்தரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த உமேந்தர் மீது ஏறி முகத்தில் மீண்டும் குத்தியதாகவும் கூறப்படுகிறது, உமேந்தர் கீழே விழுந்ததும் ஓட்டுநரை உமேந்தர் குடும்பத்தினரும் சரமாரி தாக்கியுள்ளனர்.

மயக்கமடைந்த உமேந்தர்
கீழே விழுந்த உமேந்தர் மயக்கமடைந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் உமேந்தரை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு உமேந்தரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் தப்பி ஓட முயன்ற ஓலா கார் ஓட்டுநர் ரவியை பிடித்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

ஓலா ஓட்டுநர் கைது
தகவல் அடிப்படையில் கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஓலா கார் ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். சேலம் அடுத்த ஆத்தூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்த ஓலா ஓட்டுநர் ரவி, என்பவர் மீது வழக்கு பதிவு செய்த கேளம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி, குழைந்தகள், உறவினர்கள் கண் முன்னே ஐடி ஊழியர் ஓலா ஓட்டுநரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மீளா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications