Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த வீடியோ பாருங்க... 'கரணம் தப்பினால் மரணம்'. சேதமான மலைச்சாலையில் திக் திக்.. பாலத்தை கடந்த கார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சேதமான மலைச்சாலையில் திக் திக்.. பாலத்தை கடந்த கார்-வீடியோ

    டேராடூன்: இமாச்சல பிரதேசத்தில் கனமழையால் நிலச்சரிவால் சிதைந்து போன ஒரு சாலையில் இரும்பு கம்பிகள் மூலம் ஆபத்தான முறையில் கார் கடந்து சென்றது. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் வாகனத்தை கார் ஓட்டுனர் ஓட்டிய காட்சிகள் இணையதளங்களில் பரவி வருகிறது.

    தென்மேற்கு பருவ மழை வடமாநிலங்களில் வெளுத்த காரணத்தால் இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், பீகார் , அஸ்ஸாம் உள்பட பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதேபோல் மகாராஷ்டிரா , கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மக்கள் முகாம்களில் தங்கி வசித்து வருகிறார்கள்.

    இமயலைப் பகுதிகள் பாதிப்பு

    இமயலைப் பகுதிகள் பாதிப்பு

    தென்மேற்கு பருமழையின் தாக்கம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மிக அதிகமாக உள்ளது. இதேபோல் இமயலைப்பகுதிகளிலும் மிக அதிகமாக உள்ளது.

    ஏராளமானோர் உயிரிழப்பு

    ஏராளமானோர் உயிரிழப்பு

    இமயமலையில் உள்ள இமாச்சல பிரதேச மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையில் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. அங்கு ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

    கடும் நிலச்சரிவு

    கடும் நிலச்சரிவு

    முற்றிலும் மலைப்பாங்கான பகுதிகள் நிறைந்த இமாச்சல பிரதேசத்தில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அங்குள்ள சம்பா மாவட்டத்தில் நிலச்சரிவால் மலைச் சாலைகள் பல இடங்களில் மயாமாகி உள்ளன. இதை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    பள்ளத்தை கடந்த கார்

    பள்ளத்தை கடந்த கார்

    இந்நிலையில் சம்பா மாவடடத்தில் உள்ள தேராகரி பகுதியில் கடந்த 22ம் தேதி கனமழையால் சாலை சேதமடைந்தது. நிலச்சரிவால் ஒரு பாதி சாலை மாயமான நிலையில் அந்த சாலையை கடக்க முடியாமல் ஒரு கார் அவதிப்பட்டது.

    கடந்துபோன கார்

    இதையடுத்து இரும்பு குழாய்களை சாலை சேதடைந்த இடத்தில் பதித்து தற்காலிக பாலம் அமைத்தனர். அதன்மேல் மெதுவாக காரை நகர்த்தி சாலையை கடந்துள்ளனர். ஆபத்தான இந்த பயண வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+