திட்டியதால் கோபம்.. ஆசிரியர் அறைக்குள் புகுந்து சரமாரியாக சுட்ட மாணவன்.. ஹரியானா கல்லூரியில் கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹரியானா: ஹரியானாவில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியர் திட்டியதால் மாணவன் ஒருவன் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து இருக்கிறான்.

ஷாஹித் தல்பீர் சிங் கல்லூரியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த மாணவன் இந்த கொலையை செய்துள்ளான்.

போலீஸ் இவனை தீவிரமாக தேடி வருகின்றது. சுடப்பட்ட ஆசிரியர் பெயர் ராஜேஷ் மாலிக் என்று கூறப்பட்டுள்ளது.

மரணம்

மரணம்

அந்த மாணவன் ஆசிரியரை பார்த்து மொத்தம் நான்கு முறை சுட்டுள்ளான். கத்திக் கொண்டே சுட்டு இருக்கிறான். சம்பவ இடத்திலேயே அந்த ஆசிரியர் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிசிடிவி

சிசிடிவி

அவன் அந்த ஆசிரியரை கொன்றது வீடியோவில் பதிவாகி இருக்கிறது. ஆசிரியர் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் பதிவாகி இருக்கிறது. ஆனால் போலீஸ் இந்த வீடியோ ஆதாரத்தை பொதுவில் வெளியிட முடியாது என்று கூறியுள்ளார்கள்.

காரணம்

காரணம்

ஆசிரியர் எல்லோருக்கும் முன் திட்டியதால் அந்த மாணவன் வருத்தப்பட்டு இருக்கிறார். தன் நண்பர்களிடம் அந்த ஆசிரியர் குறித்து கோபமாக பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் கொலைக்கு உண்மையான காரணம் இதுதான் என்று சொல்ல முடியவில்லை.

வெளியேறினார்

வெளியேறினார்

ஆசிரியரை சுட்டவுடன் அந்த மாணவன் அங்கிருந்து வெளியேறி இருக்கிறான். அங்கு கூடிய கூட்டத்தை பயன்படுத்தி அவன் பள்ளியைவிட்டு வெளியே சென்றுள்ளான். அவர் வெளியே சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A college student shot down his teacher in Haryana. Police are in search of him. Teacher Rajesh Malik died on the spot.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற