தவறு செய்த குழந்தையை எண்ணெய் சட்டியில் உட்கார வைத்த தாய்... ஹைதராபாத்தில் நடந்த கொடுமை
ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் குழந்தையை சூடான எண்ணெய் சட்டையில் போட்டு கொடுமைப்படுத்தி இயக்கிறார்.
ஹைதராபாத்: ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் குழந்தையை சூடான எண்ணெய் சட்டையில் உட்கார வைத்து கொடுமைப்படுத்தி இயக்கிறார். இதனால் அந்த பெண் குழந்தையின் உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது.
தற்போது லலிதா மஹாபத்ரா என்ற அந்த பெண்ணின் மீது வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
லலிதாவின் தண்டனைக்கு பயந்து அவரது குழந்தை வீட்டை விட்டு ஓடி சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த குழந்தை தற்போது நடந்த சம்பவங்கள் அனைத்தையும் வாக்குமூலமாக அளித்து உள்ளது.

போலீஸ் நிலையத்தில் புகார்
ஹைதராபாத்தின் ஸ்ரீகாகுளம் என்ற நகரத்தில் இருக்கும் போலீஸ் நிலையத்தில் லலிதா மற்றும் அவரது கணவர் பிரகாஷ் ஆகியோர் ஒரு குழந்தையுடன் நேற்று புகார் அளிக்க வந்துள்ளனர். புகாரில் அந்த குழந்தையை பக்கத்தில் இருக்கும் ரயில் நிலையத்தில் கண்டெடுத்தாக குறிப்பிட்டு இருக்கின்றனர். மேலும் நான்கு வயது நிரம்பிய அந்த குழந்தை அம்மாவை பார்க்க்க வேண்டும் என்று அழுததாகவும் புகார் அளித்துள்ளனர்.

போலீசின் சந்தேகம்
அந்த குழந்தையின் உடல் முழுக்க காயமாக இருந்துள்ளது. முதலில் அந்த குழந்தை அநாதை குழந்தையாக இருக்கலாம் என்று நினைத்து போலீஸ் புகாரை பதிவு செய்ய நினைத்து இருக்கிறது. ஆனாலும் அந்த தம்பதி மீது சந்தேகம் இருந்ததால் போலீஸ் அந்த குழந்தையை மட்டும் தனியாக கூப்பிட்டு விசாரித்துள்ளனர். அந்த குழந்தை விசாரணையில் அவர்கள் இருவரும்தான் தன்னுடைய உண்மையான அம்மா, அப்பா என்று கூறியிருக்கிறது.

அதிர்ச்சி அளிக்கும் தகவல்
அதேபோல் அந்த குழந்தை போலீசில் இன்னும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய பல தகவல்களை தந்து இருக்கிறது. அதில் ''என் அம்மா என்னை தினமும் சூடான எண்ணெய் சட்டியில் உட்காரவைத்து கொடுமை படுத்தினார். என்னை எங்காவது ஓடிப்போகும்படி கூறினார். என் உடலில் அப்படித்தான் நிறைய காயங்கள் ஏற்பட்டது.'' என்று லலிதா அவருக்கு செய்த கொடுமைகள் அனைத்தையும் அந்த குழந்தை வாக்குமூலமாக அளித்து இருக்கிறது.

விசாரணை
இந்த நிலையில் போலீஸ் அந்த தம்பதியை கைது செய்து விசாரணை செய்தது. முதலில் உண்மையை ஒப்புக்கொள்ளாத அந்த தம்பதி பின் போலீசுக்கு பயந்து அனைத்தையும் ஒப்புக்கொண்டு இருக்கின்றனர். மேலும் அந்த குழந்தையை வளர்ப்பதற்கு பிடிக்காத காரணத்தினால்தான் போலீஸ் நிலையத்தில் அநாதை குழந்தை என்று கூறி ஒப்படைத்தாக வாக்குமூலம் அளித்துள்ளனர். தற்போது போலீஸ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவலில் வைத்து இருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications