ஐபோன்15 வாங்குறதுக்காக இப்படியா? குஜராத் நபர் என்னவெல்லாம் பண்ணியிருக்காரு பாருங்க!
அகமதாபாத்: ஆப்பிள் நிறுவனம் அண்மையில் மேம்பட்ட அப்டேட்களுடன் ஐபோன் 15 மாடலை அறிமுகம் செய்தது. இந்த புதிய மாடலின் விற்பனை நேற்று முதல் இந்தியாவில் தொடங்கியது. இந்தியாவில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் ஐபோன்களை வாங்க கூட்டம் அலைமோதுகிறது.
ஐபோன் 15 இன் நான்கு பதிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது - ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ். இந்த மாடல்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஐபோன் உற்பத்தி மையத்தில் இந்த போன்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. முதல்முறையாக உலக மார்க்கெட்டில் ஐபோன் கிடைக்கும் அதே நாளில் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் உள்ள மார்கெட்டிலும் போன்கள் கிடைத்துள்ளன.

அதேபோல் ஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் மற்றும் ஏர்போட்ஸ் ப்ரோவை USB-C செயல்பாட்டுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் முதல்முறையாக USB-C சார்ஜ் டைப்புடன் அமலுக்கு வந்துள்ளது. ஆப்பிள் போனில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சங்களைத் அம்சங்கள் மக்கள் இடையே கவனம் ஈர்த்து உள்ளது. அதே போல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பயனர்கள் ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸை வாங்குவதற்கான முன்பதிவு தேதிகள் மற்றும் விலை பற்றி ஆர்வமாக இருந்தனர்.
இந்தியாவில் ஐபோன் முன்பதிவு செப்டம்பர் 15 தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. விற்பனை நேற்று தொடங்கியது. மும்பையின் பந்த்ரா குர்லாவில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் ஐபோனை வாங்குவதற்காக பலரும் திரண்டனர். ஐபோன் வாங்குவதற்காக அகமதாபாத்தில் இருந்து மும்பை வந்த ஒருவர் கிட்டதட்ட 17 மணி நேரம் லைனில் காத்திருந்து போனை வாங்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், வியாழக்கிழமை மாலை 3 மணியில் இருந்தே நான் இங்கே நின்றேன். 17 மணி நேரம் காத்திருந்து ஐபோனை வாங்கியுள்ளேன்" என்றார். அதேபோல் பெங்களூரை சேர்ந்த விவேக் என்பவர் கூறுகையில், " ஆப்பிள் போனை வாங்கியது மகிழ்ச்சியாக உள்ளது. டெல்லி மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் நீண்ட வரிசையை காண முடிகிறது" என்றார்.
இந்தியாவில் விலை என்ன? 128 ஜிபி அடிப்படை ஸ்டேரேஜ் வசதியுடன் வெளியாகும் ஐபோன் 15 விலை ₹ 79,900. இதே மெமரியுடன் வெளியாகும் iPhone 15 Plus இன் விலை ₹ 89,900. iPhone 15 Pro (128 GB) இன் விலை ₹ 1,34,900 இல் தொடங்குகிறது, மேலும் 256GB ஸ்டோரேஜ் வசதி கொண்ட iPhone 15 Pro Max ஐ வாங்க விரும்பினால், ₹ 1,59,900 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications