Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமானுஷ்ய பூஜை.. தோட்டத்தில் கழுத்தை வெட்டிக்கொண்ட தம்பதியினர்.. காரணம் என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத்தில் அமானுஷ்ய பூஜை நடத்தி கணவன் மனைவி என இருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாந்திரீகம், அமானுஷ்யம் போன்றவற்றின் மீது மக்கள் என்னதான் நம்பிக்கை கொண்டிருந்தாலும், தன்னுடைய உயிர் போகும் அளவுக்கு யாராவது இதனை நம்புவார்களா? ஆம் அப்படி ஒரு சம்பவம்தான் குஜராத்தில் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் மாவட்டத்தின் விஞ்சியா கிராமத்தை சேர்ந்தவர் ஹேமு மக்வானா(38). இவருக்கு 35 வயதில் ஹன்சா மக்வானா எனும் மனைவி மற்றும் 12, 13 வயதுகளில் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

A husband and wife committed suicide after performing occult puja in Gujarat

விவசாயம் செய்து வரும் ஹேமுவுக்கு வாழ்க்கையில் கடன் பிரச்னையோ, குடும்ப பிரச்னையோ எதுவும் கிடையாது. இப்படி இருக்கையில் கடந்த சில ஆண்டுகளாக தெய்வ பக்தியில் தீவிரமாக இறங்கிய ஹேமு தனது மனைவியையும் இதில் ஈடுபடுத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு இவர்களுடைய விவசாய தோட்டத்தில் சிறிய சிவன் கோயில் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதனையடுத்து கோயிலிலிருந்த சிவ லிங்கத்திற்கு முக்கால பூஜையும் செய்துள்ளனர்.

இவ்வாறு இருக்கையில் இரு தினங்களுக்கு முன்னர் ஹேமு தனது சகோதரரை சந்தித்திருக்கிறார். அப்போது தனது இரண்டு குழந்தைகளையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு தான் ஒரு பெரிய பூஜை நடத்துவதாகவும் இந்த பூஜைக்கு இடையூறாக இவர்கள் இருப்பார்கள் என்பதால் உன்னிடம் ஒப்படைத்துவிட்டு போகிறேன் என்று கூறியுள்ளார். ஹேமுவின் தம்பியும் பெரியதாக எதையும் பொருட்படுத்திக்கொள்ளாமல் சரி அண்ணன் குழந்தைகள்தானே என்று பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் இரண்டு நாட்கள் ஹேமு அவர் தம்பிக்கும் தங்களது குழந்தைகளுக்கும் போன் செய்யவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹேமுவின் சகோதரர் தனது அண்ணனுக்கு போன் செய்து பார்த்திருக்கிறார்.

ஆனால் போன் ரிங் ஆகியிருக்கிறது. யாரும் அதை அட்டன் செய்யவில்லை. எனவே ஹேமுவின் வீட்டிற்கு சென்று பார்த்திருக்கிறார். அங்கு ஹேமு இருக்கவில்லை. சரி தோட்டத்தில் இருப்பார்கள் என்று சென்று பார்த்திருக்கிறார். அங்குதான் இவருக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. அதாவது, ஜில்லட்டின் பிளேடு போன்று ஒரு கருவியும் அதன் அருகில் இருந்த கூடையில் அண்ணன் ஹேமும் மற்றும் அவரது மனைவியின் தலைகள் இருந்துள்ளன. இதை பார்த்து அலறியடித்துக்கொண்டு வந்த அவர் உடனடியாக அக்கம் பக்கத்தில் ஆட்களை அழைத்திருக்கிறார். பின்னர் அவர்கள் வந்து பார்த்துவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றியுள்ளனர்.

அந்த இடத்தில் யாகம் வளர்க்கப்பட்டுள்ளது. அதேபோல பூஜைக்கான அனைத்து பொருட்களும் இருந்திருக்கிறது. மேலும் ஹேமுவின் செல்போனும் அவரது பாக்கெட்டிலிருந்து கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, "விஞ்சியா கிராமத்தில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் இரண்டு உடல்கள் தலையற்று இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்தோம். அங்கு உயிரிழந்த ஒருவரின் பாக்கெட்டில் கடிதம் ஒன்று கிடைத்தது. கடிதத்தில் எங்கள் மரணத்திற்கு யாரும் காரணமில்லை. உறவினர்கள் எங்களை நல்லபடியாகதான் பார்த்துக்கொண்டனர் என்று எழுதப்பட்டிருந்தது.

உடல்கள் பிரதே பரிசோதனைக்கும் டிஎன்ஏ பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்ட விசாரணைில் உயிரிழந்தது ஹேமு மக்வானா மற்றும் அவரது மனைவி ஹன்சா மக்வானா என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது தற்கொலையா? கொலையா? அல்லது ஏதாவது புதையல் எடுக்கும் முயற்சியில் உயிரிழந்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவர்கள் நீண்ட நாட்களாக மாந்திரீகம், பூஜை என செய்து வந்திருக்கின்றனர். எனவே விசாரணை முடிந்த பின்னர்தான் உண்மை என்ன என்பது தெரிய வரும்" என்று கூறியுள்ளனர். மாந்திரீக பூஜையில் ஈடுபட்டு தம்பதியின் கழுத்தை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+