இதை விட எப்படிச் சொல்வது.. அழகு!
மும்பை: ஒளிவுமறைவில்லாத துணிவும்.. ஒரு அழகுதான். ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்த ஒரு யூடியூப் வீடியோவும் இந்த வாசகத்தை உறுதி செய்கிறது.
அவ்வளவு அழகாக இதைப் படம் பிடித்துள்ளனர். சொல்ல வந்த விஷயத்தை தைரியமாக, தெளிவாக சொல்லியுள்ளனர். ஒவ்வொருவரின் உரிமையும் மதி்ப்புக்குரியது என்பதை அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளனர்.
இப்போது சமூக வலைதளங்களில் வலம் வரும் இந்த வீடியோவை முழுதாக பார்த்து முடிக்கும்போது வாவ் என்று சொல்ல வைக்கிறது - கான்செப்ட் எப்படி இருந்தாலும்.

இரு இளம் பெண்கள்
அவர்கள் இரு இளம் பெண்கள். ஒருவர் மேக்கப்புடன் தயாராகிக் கொண்டிருக்கிறார். இன்னொருவர் குட்டித் தூக்கத்தை முடித்து எழுகிறார்.

சின்னச் சின்ன பேச்சு
மேக்கப்புடன் தயாராகி வரும் பெண்ணிடம் சின்னதாக சாட் செய்து விட்டு குளிக்கச் செல்கிறார்.. தூங்கி எழுந்தவர்.

இடையில் ஒரு போன் கால்
இடையில் மேக்கப் செய்து கொண்டிருக்கும் பெண்ணுக்குப் போன் வருகிறது. மறு முனையில் அவரது அப்பா.. அப்பா வந்து விட்டீர்களா என்று கேட்கிறார். அம்மாவுக்கு ஓகேவா என்றும் கேட்கிறார். பிறகு வீட்டை அடைந்ததும் போன் செய்யுமாறு கூறுகிறார்.

அழகான உணர்வுகள்
குளித்து முடித்த தோழி வருகிறார்.. ஜன்னலோரம் போய் நிற்கிறார் மேக்கப் முடிந்த தோழி.. இருவரும் அருகருகே நிற்கிறார்கள். தென்றல் போல தீண்டிச் செல்கிறது அவர்களுக்கிடையிலான உறவின் நிழல்...!

அம்மாவுக்குப் பிடிக்காது.. எனக்குப் பிடிக்கும்
அம்மாவுக்கு என்னைப் பிடிக்குமா என்று கேட்கிறார் அந்த குளித்து வந்த தோழி.. உன்னுடைய குட்டை முடி அம்மாவுக்குப் பிடிக்காது.. ஆனால் எனக்குப் பிடிக்கும் என்கிறார் இந்தத் தோழி..

முத்தமிட்டு அன்புப் பரிமாற்றம்
பின்னர் அந்த குட்டை முடித் தோழியை பாசத்துடனும், அன்புடனும் ஆரத் தழுவி முத்தம் பதிக்கிறார் தோழி.. இருவரின் முகத்திலும் நிம்மதிப் பெருமூச்சு வந்து போகிறது.

ஓரினம்..
ஆம் இருவரும் ஓரினச் சேர்க்கையாளர்கள். இருவரையும் சந்திக்கவே தோழியரில் ஒருவரின் பெற்றோர் வருகின்றனர். அவர்களைச் சந்திக்க இருவரும் ஆர்வமுடன் தயாராகின்றனர். இதுதான் இந்த வீடியோ படத்தின் கரு.
துணி விளம்பரத்திற்காக
இது ஒரு துணி நிறுவனம் தயாரித்துள்ள விளம்பரப் படம்தான். ஆனால் அதில் சேம் சேக்ஸ் உறவை அழகாக காட்டியுள்ளது அனைவரையும் கவர்ந்து இழுத்துள்ளது. பலரும் இந்த விளம்பரத்தைப் பார்த்து இதை வைரல் ஆக்கியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications