என்னங்க இது அநியாயமா இருக்கு!.. மான், காட்டெருமை போயி.. நாயை துரத்தும் அளவுக்கு இறங்கி வந்த "ராணி"

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: ஒரு நாயை துரத்திக் கொண்டு வந்த போது பெண் சிங்கம் ஒன்று குஜராத்தின் அம்ரேலி மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

    என்னங்க இது அநியாயமா இருக்கு!.. மான், காட்டெருமை போயி.. நாயை துரத்தும் அளவுக்கு இறங்கி வந்த 'ராணி'

    குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ளது கோவயா கிராமம். அங்கு ஒரு பெட்டிக் கடையை நடத்தி வருகிறார் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண். கடையை அடைப்பதற்காக பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

    மேலும் குஜராத்தில் கடும் குளிர் காரணமாக மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அம்ரேலி மார்க்கெட் பகுதியே ஆள் அரவமில்லாததாக மாறியது.

    நாய்

    நாய்

    அப்போது ஒரு நாய் வாலை சுருட்டிக் கொண்டு ஓடி வந்து ஒரு இடத்தில் ஒளிந்து கொண்டது. பின்னால் தூரத்தில் இருந்து ஒரு விலங்கு வந்து கொண்டிருந்ததை அந்த கடைக்கார பெண் கண்டார். அதை அவர் நாய் என நினைத்துக் கொண்டு அவரது பணியை கவனித்து கொண்டிருந்தார்.

    கடைக்கார பெண்

    கடைக்கார பெண்

    அந்த சமயம் அந்த விலங்கை பார்த்தவருக்கு அதிர்ச்சி. அது ஒரு பெண் சிங்கம். உடனடியாக தனது செல்போனை எடுத்து மறைந்திருந்து வீடியோ எடுத்தார். சிங்கமும் அங்கும் இங்கும் பார்த்தது. சிறிது நேரம் ஒரே இடத்தில் நின்றது. அப்போதுதான் அந்த கடைக்கார பெண்ணுக்கு புரிந்தது.

    சிங்கங்கள்

    சிங்கங்கள்

    நாயை துரத்தில் கொண்டு வந்த போது சிங்கம் ஊருக்குள் வந்துவிட்டது என்பது. இது முதல் முறையல்ல, ராம்பார் கிராமத்தில் கூட இது போல் அவ்வப்போது சிங்கங்கள் அடிக்கடி நுழைவது வாடிக்கையாகிவிட்டது. என்றார். மக்களும் சிங்கங்கள், சிறுத்தைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வேண்டும் என வனத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    வைரல்

    வைரல்

    இந்த காட்டு விலங்குகள் கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, நாய் ஆகியவற்றை வேட்டையாடவே உள்ளே வருகிறது. அப்போது யாராவது அவற்றை துரத்தினால் அவர்களை தாக்கி விடுகிறது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+