ப்பா எவ்வளவு பெரிய வைரம்.. பெரிய கல்லு பெரிய லாபம்.. நிலத்தை தோண்டி கோடீஸ்வரனான ஏழை முதியவர்!
மத்திய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தங்கள் நிலத்தில் எடுத்த வைரத்தை 2.56 கோடி ரூபாய்க்கு ஏலம் விட்டு இருக்கிறார்.
Recommended Video

போபால்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தங்கள் நிலத்தில் எடுத்த வைரத்தை 2.56 கோடி ரூபாய்க்கு ஏலம் விட்டு இருக்கிறார்.
மத்திய பிரதேச மாநிலம் பன்னாவை சேர்ந்தவர் மோதிலால் பிரஜாபதி. இவர் குடும்பம், பல காலமாக, நிலத்தை லீசுக்கு எடுத்து அதில் சுரங்கம் அமைத்து வைரம் தேடுவதை வழக்கமாக வைத்து இருந்தனர்.
பன்னாவில் இதுபோல் வைர சுரங்கங்கள் நிறைய இருக்கிறது. இதனால் தங்கள் நிலத்திலும் வைரம் கிடைக்குமா என்று மோதிலால் பல காலமாக காத்திருந்துள்ளார்.

தேடி கண்டுபிடித்தனர்
இந்த நிலையில் கடந்த மாதம் அவர் தனது லீசுக்கு எடுத்த நிலத்தை வைரம் எடுப்பதற்காக தோண்டி இருக்கிறார். தன்னுடைய உறவினர்களுடன் வைரத்தை தேடிய அவருக்கு பெரிய வைரக்கல் கிடைத்து இருக்கிறது. இதை உடனே சென்று மாவட்ட அதிகாரிகளிடம் அவர் ஒப்படைத்து இருக்கிறார்.

மிக பெரியது
இது மத்திய பிரதேசத்தில் இதுவரை எடுக்கப்பட்ட வைரங்களில் மிகப்பெரிய வைரம் என்று கூறப்பட்டுகிறது. மத்திய பிரதேசத்தில் இத்தனை கனமான வைரம் இதற்கு முன் கிடைத்தது கிடையாது. இதுதான் அங்கு இருப்பதிலேயே மிகவும் பெரியது என்று கூறுகிறார்கள்.

ஏலம் விட்டனர்
இந்த நிலையில், இந்த வைரத்தை ஏலம் விட்டனர். நேற்று இந்த வைரம் ஏலம் விடப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த சரண் சிங் என்ற தொழிலதிபர் இந்த வைரத்தை வாங்கினார். 2.56 கோடி ரூபாய் கொடுத்து அவர் இந்த வைரத்தை வாங்கினார்.

எவ்வளவு வரும்
இதில் வரி, மாநில பிடித்தம் போக 2.30 கோடி ரூபாய் மோதிலாலுக்கு கிடைக்கும் என்று கூறுகிறார்கள். இந்த பணம் தனது குடும்ப வறுமையை அடியோடு போக்கும் என்று மோதிலால் கூறியுள்ளார். இந்த சம்பவம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications