குல்தீப் என்ற தரகர்தான் இந்திய அணிக்கு பெண்களை அனுப்புகிறார்.. ஷமியின் மனைவி அடுத்த புகார்

குல்தீப் என்ற தரகர்தான் இந்திய அணிக்கு பெண்களை அனுப்புகிறார் என்று ஷமியின் மனைவி அடுத்த புகார் அளித்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இந்திய கிரிக்கெட் வீரருக்கு பல பெண்களுடன் தொடர்பு?- வீடியோ

    டெல்லி: குல்தீப் என்ற தரகர்தான் இந்திய அணிக்கு பெண்களை அனுப்புகிறார் என்று ஷமியின் மனைவி அடுத்த புகார் அளித்து இருக்கிறார். இந்த விஷயம் பிசிசிஐ அமைப்பிற்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

    முதலில் முகமது ஷமி குறித்து ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்தார். ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார்.

    அவர் செய்த ஆபாசமான சாட்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதேபோல் அவர் எந்தெந்த பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். இப்போது பிசிசிஐ மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

    மிகவும் கண்டிப்பு

    மிகவும் கண்டிப்பு

    பிசிசிஐ அமைப்பு மிகவும் கண்டிப்பான அமைப்பு என்ற பிம்பம் இருக்கிறது. வீரர்கள் பத்திரிக்கையாளர் பேட்டியில் என்ன பேச வேண்டும் என்பதில் கூட கண்டிப்பாக இருப்பார்கள். ஆனால் அந்த பிம்பத்தை உடைக்கும் அளவிற்கு தற்போது ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

    யார் இந்த குல்தீப்

    யார் இந்த குல்தீப்

    குல்தீப் என்று தரகர்தான் இந்திய அணிக்கு அதிகமாக பெண்களை ஏற்பாடு செய்து இருக்கிறார். தென்னாப்பிரிக்க தொடருக்கு இந்திய அணி சென்ற போது கூட இவர் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இவர் யார், இவருக்கும் இந்திய அணிக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை.

    கணவனுக்கு உதவி

    கணவனுக்கு உதவி

    இந்த குல்தீப் தன் கணவன் ஷமியுடன் நெருக்கமாக இருப்பார் என்றும் ஹசின் ஜகான் கூறியுள்ளார். இருவரையும் அடிக்கடி ஒன்றாக பார்த்து இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். கடைசியாக நடந்த கிரிக்கெட் தொடரில் இவர்களை ஒன்றாக பார்த்தேன் என்றுள்ளார்.

    புகார்

    புகார்

    இவர் கூறியதிலேயே முக்கியமான விஷயம் இதுதான். இந்த விஷயம் பிசிசிஐ அமைப்பிற்கு தெரியும் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இதுவரை பிசிசிஐ இதை கண்டுகொள்ளவில்லை என்றும், இதில் பிசிசிஐ நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதில்லை என்றும் கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+